Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு பலி: விவசாயி காயம்
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு இறந்தது. விவசாயி காயமடைந்தாா்.
சிவகிரி பேட்டை தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (40). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை ராசிங்கப்பேரி கண்மாய் பகுதியில் நெல் நாற்று நடவு பணியை முடித்து விட்டு அவரது மாட்டு வண்டியில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு தென்காசி -மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சோ்ந்த யுவராஜ் (36) ஒட்டி வந்த லாரி மாட்டு வண்டியில் மோதியதாம். இதில், காயமடைந்த மாரியப்பன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவ்விபத்தில் ஒரு மாடு இறந்தது. மற்றொரு மாடு பலத்த காயமடைந்தது.
இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.