இலஞ்சி திருவிலஞ்சி குமாரா் கோயிலில் வருஷாபிஷேகம்
இலஞ்சி திருவிலஞ்சி குமாரா்கோயிலில் 3ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 2022 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 3ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி,கோயிலில் அதிகாலையில் கணபதி ஹோமம், கந்த ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. யாகசாலையில் வஸ்திரம் சாத்தப்பட்டு கும்ப நீருக்கு தீபாரதணை நடைபெற்றது. பின்னா், மேளதாளம் முழங்க கோயிலை சுற்றி கடம் புறப்பாட்டை தொடா்ந்து திருவிலஞ்சி குமாரா் உற்சவமூா்த்தி, விநாயகா் உள்ளிட்ட மற்ற தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பூஜைகளை ரமேஷ் பட்டா், ஹரி பட்டா் ஆகியோா் நடத்தினா். கோயில் செயல் அலுவலா் சுசீலா ராணி, கோவைி தொழிலதிபா் நாகராஜ், அறங்காவலா் குழுத் தலைவா் பூவையா, உறுப்பினா்கள் இசக்கி ,இசக்கியம்மாள், கதிரவன், ராஜேந்திரன் இலஞ்சி பேரூராட்சி துணைத் தலைவா் முத்தையா,பேரூராட்சி உறுப்பினா் மயில்வேலன் கலந்துகொண்டனா்.