ஆலங்குளத்தில் 2ஆவது நாளாக மழை
ஆலங்குளத்தில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மழை பெய்தது.
சில வாரங்களாக ஆலங்குளம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த நிலையில், திங்கள்கிழமை (மாா்ச் 17) மழை பெய்தது.
இந்நிலையில், 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஆலங்குளம், அடைக்கலப்பட்டணம், அத்தியூத்து, கழுநீா்குளம், நல்லூா், புதுப்பட்டி, ஊத்துமலை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்தது.