செய்திகள் :

Lung Health: நுரையீரலில் எந்தப் பிரச்னைகளும் வராமல் ஆரோக்கியமாக இருக்க... மருத்துவர் சொல்லும் வழி!

post image

நுரையீரல், நம் உடலின் ராஜ உறுப்புகளில் ஒன்று. இது ஆரோக்கியமாக இல்லையென்றால், நம் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் கேள்விக்குறிதான். அதனால், நுரையீரலில் எந்தப் பிரச்னைகளும் வராமல் தடுப்பது எப்படி என்று சொல்கிறார், காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோய் நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் ராமச்சந்திரன்.

lungs
lungs

''தொடர்ந்து பல வருடங்களாக பிசியான சிக்னல்களில் நின்று புகை நிரம்பிய அந்தக் காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு, நுரையீரல் காற்றுக்குழாய்களில் அடைப்பு வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றன. பொதுவாக இந்தப் பிரச்னை புகை பிடிப்பவர்களுக்கு வரும். இப்போது மாசுபட்ட காற்றைத் தொடர்ந்து சுவாசிப்பவர்களுக்கும் வருகிறது.

தொடர்ந்து மாசடைந்த காற்றைச் சுவாசித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு அதிகமாகிவிடும். தொடர்ந்து மாசு படிந்த காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கும்போது கண்ணுக்கே தெரியாத துகள்கள் நுரையீரலில் படிந்து ரத்தத்தில் கலந்து விடும். இது கேன்சர் போன்ற பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். தவிர, இந்த துகள்கள் ரத்தத்திலும் கலந்துவிடுவதால், அது மூளை அல்லது இதயத்துக்குள் செல்லும்போது அங்கும் சில பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இந்தத் துகள்கள் 2.5 மைக்ரன்ஸ் மட்டுமே இருக்கும் என்பதால், மூக்கின் உள்ளே இருக்கிற சளிப்படலத்தாலோ, முடியாலோ அதைத் தடுக்க முடியாது. இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி வண்டி ஓட்டும்போதும், பயணிக்கும்போதும் மாஸ்க் அணிவது மட்டும்தான்.

சம்பந்தப்பட்ட நபருக்குச் சளி, இருமல் தொந்தரவுகள் இருக்காது என்றாலும் மூச்சு வாங்கும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தொடர்ந்து இருமல் இருப்பது... அந்த இருமல் எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல் இருப்பது... சோர்வாக உணர்வது... உடல் எடை குறைந்து கொண்டே வருவது... ஒருவேளை துரதிஷ்டவசமாக நுரையீரலில் கேன்சர் வந்துவிட்டது என்றால், அதற்கான அறிகுறிகளான பசியின்மை, திடீர் உடல் எடை குறைதல், இருமும் போது ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் வரலாம். தவிர, நெஞ்சு வலி, கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்கள் வரைக்கும் அவர்களுடைய இயல்பான குரலிலிருந்து மாற்றமடைந்து இருக்கும். சிலருக்கு உணவு விழுங்குவதும் கஷ்டமாக இருக்கும்.

Dr. M. V. Ramachandran, Consultant Pulmonologist

புகைப்பிடிப்பவர்களை ஃபர்ஸ்ட் ஹாண்ட் ஸ்மோக், செகண்ட் ஹேண்ட் ஸ்மோக், தர்ட் ஹேண்ட் ஸ்மோக் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

புகைப்பிடிப்பவர்கள் முதல் பிரிவின் கீழ் வருவார்கள். இவர்களுக்கு சினிமா தியேட்டர்களில் படம் வருவதற்கு முன் புகைப்பிடிப்பதால் வரக்கூடிய பிரச்னைகளை விளம்பரம் செய்வார்கள் இல்லையா... அந்தப் பிரச்னைகள் வரும். இந்தப் பிரச்னைகள் வந்துவிட்டால் சரி செய்ய முடியாது. ஆனால், வருவதற்கு முன் தடுக்க முடியும். சிகரெட் புகையில் இருக்கிற கண்ணுக்குத் தெரியாத சிறு, சிறு துகள்களும்கூட நுரையீரலில் படிந்து ரத்தத்தில் கலக்கக்கூடியதுதான். இதனாலும் இதயத்தில் பிரச்னைகள், நுரையீரலில் புற்றுநோய் வரலாம்.

இப்போது இரண்டாவது பிரிவினருக்கு வருவோம். இவர்கள் புகைப்பிடிப்பவர்களின் அருகே இருக்கிற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். புகைப்பிடிப்பவர்களுக்கு இதய நோய், புற்றுநோய் வருவது எப்படி எளிதானதோ, அதுபோலவே புகைப்பிடிப்பவர்களின் அருகே இருப்பவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் எளிதாக வந்துவிடும். ஏனென்றால், சிகரெட்டுக்குள் இருக்கிற பொருள்களில் 200 முதல் 300 வரை வகையான புற்றுநோய் வரவழைக்கக்கூடிய கார்சினோமா இருக்கின்றன. இந்தத் துணுக்குகள் நுரையீரலுக்குள் சென்றால் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.

இதில் உண்மை இல்லை. அருகே இருப்பவர்களைவிட புகைப்பிடிப்பவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் மொத்தமாகப் புகையை உள்ளே இழுக்கிறார்கள். இதனால், அருகே இருப்பவர்களைவிட புகைப்பிடிப்பவர்களின் நுரையீரலில்தான் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான துணுக்குகள் நிறைய படித்திருக்கும். இதற்கென இருக்கிற உபகரணத்தைப் பயன்படுத்தி நுரையீரலைப் பரிசோதித்துப் பார்த்தால், நீண்ட காலமாகப் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரலில் கருந்திட்டுகளாகப் புகை படிந்து போய் இருக்கும்.

புகைப்பிடிப்பவர்களைவிட அருகே இருப்பவர்களுக்குப் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம் குறைவுதான் என்றாலும், அவர்களுக்கும் பிரச்னை வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை நான் இங்கே அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன்.

Smoking lungs

இப்போது மூன்றாவது பிரிவினரைப் பார்ப்போம். அதாவது புகைப்பிடிக்கிற முதல் பிரிவினரின் உடைகளிலும், அவர்களுக்கு அருகே இருப்பவர்களின் உடைகளிலும் படிந்திருக்கிற சிகரெட் புகையின் வாடையை நுகர்பவர்கள்தான் இந்த மூன்றாவது பிரிவினர். இவர்களுக்கும் முதலிரண்டு பிரிவினர்களுக்கு வரக்கூடிய அதே பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருப்பதாகச் சமீபத்திய சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஆய்வுகள் நடந்துகொண்டே கொண்டிருக்கின்றன என்பதையும் இங்கே நான் பதிவிட விரும்புகிறேன்.

புகைப்பிடிப்பதால் வரக்கூடிய நுரையீரல் புற்றுநோய்க்கும் சளி, இருமல், மூச்சுத்திணறல், இருமும்போது ரத்தம் வெளிப்படுதல் போன்றவைதான் அறிகுறிகள். புகைப்பிடிப்பவர்களுக்குக் காலையில் எழுந்தவுடன் சளி அதிகமாக வெளியேறும். எந்த அளவுக்கு என்றால் நுரையீரலில் பிரச்னை இல்லாத ஒரு நபருக்குக் காலையில் 30 எம்.எல் வரை சளி வெளியேறும் என்றால், இவர்களுக்கு 60 எம்.எல் வரை வெளியேறும்.

ஆஸ்துமா ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை தற்போது வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆஸ்துமா என்பதும் ஒரு வகையான அலர்ஜிதான். குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் அது மற்றவர்களுக்கும் வரலாம். தாத்தா - பாட்டிக்கோ அல்லது பெற்றோருக்கோ ஆஸ்துமா இருந்தால், அது அவர்களுடைய பிள்ளைகளுக்கோ அல்லது பேரன் - பேத்திக்கோ வரலாம். மற்றபடி, ஆஸ்துமா என்பது ஒரு வியாதி கிடையாது. அது ஒரு நிலைதான்.

சிலருக்குப் பூவாசம் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு சென்ட் வாசம், சிலருக்கு பாடி ஸ்பிரே வாசம் ஒத்துக்கொள்ளாது. பூவில் இருக்கிற மகரந்தத்தைச் சுவாசித்துவிட்டால் அவர்களுடைய மூச்சுக்குழாயில் இறுக்கம் ஏற்பட்டு மூடிக்கொள்ளும். அந்த அலர்ஜிக்கான எதிர்வினை அது. இப்படி ஆஸ்துமாவைத் தூண்டிவிடக் கூடிய காரணிகளைக் கண்டறிந்து அதைத் தவிர்த்து விட்டாலே, அந்தக் காரணங்களால் ஆஸ்துமா வருவதை தடுத்து விடலாம். அந்தக் காரணிகளைத் தவிர்ப்பதுதான் ஆஸ்துமாவுக்கு முதல் சிகிச்சை.

ஆஸ்துமா

கெமிக்கல் தயாரிக்கும் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு அதன் காரணமாக ஆஸ்துமா வரலாம். அந்த வேலையைத் தவிர்த்துவிட்டாலே அவர்களுக்கு ஆஸ்துமா வருவதை தடுத்துவிடலாம். சில மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது ஆஸ்துமா வரலாம். இவையெல்லாம் ஆஸ்துமா வருவதற்கான தெரிந்த காரணங்கள்... தெரியாத காரணங்கள் நிறைய இருக்கலாம்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல ஆஸ்துமா என்பது ஒரு நிலை. அந்தப் பிரச்னை வரும்போது சுவாசக்குழாய் சுருங்கும். அதற்கான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் சுவாசக்குழாய் விரிந்து விடும்.

உண்மைதான். பனிக்காலத்தில் இருக்கிற குளிர் சீதோஷ்ணமே ஆஸ்துமாவைத் தூண்டி விட்டுவிடும். பனிக்காலத்தில் நிறைய வைரஸ்கள் காற்றில் பரவி இருக்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் வைரஸ் காய்ச்சல்கள் அதிகமாக வரும். அதிகாலையிலோ அல்லது இரவிலோ வெளியே சென்றால் அந்த வைரஸ் தொற்று உங்களையும் தொற்றிக் கொள்ளும். இதனால், ஆஸ்துமா தூண்டிவிடப்படும் அல்லது இன்னும் அதிகமாகும்.

ஆஸ்துமா

ஆஸ்துமா வியாதி அல்ல என்பதால் அதைக் குணப்படுத்த முடியும் என்று சொல்ல முடியாது. அது ஒரு நிலை என்பதால், அதை தூண்டி விடக்கூடிய காரணிகளைத் தடுத்துவிட்டால் ஆஸ்துமா வராமல் தடுக்க முடியும். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஏதோ ஒரு உணவுப்பொருள் உங்களுக்கு அலர்ஜி என்றால் அதை நாம் வியாதி என்று சொல்ல மாட்டோம். அந்த உணவுப்பொருளைச் சாப்பிட மாட்டோம் அவ்வளவுதான். இதே நிலைதான் ஆஸ்துமாவுக்கும் பொருந்தும். காரணிகளைத் தடுத்துவிட்டால் அது வாழ்நாள் முழுக்க வராது அவ்வளவுதான்.

ஆஸ்துமா எப்படி வரும் என்றால், குழந்தைப் பருவத்தில் ஆஸ்துமா வந்திருக்கும். பிறகுச் சரியாகி இருக்கும். பத்து அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து மறுபடியும் அதே காரணி தூண்டும்போது ஒரு எபிசோட் போல மறுபடியும் ஆஸ்துமா வரும்.

தடுக்கும். என்றாலும், அதை சிகிச்சையாக எடுத்துக்கொள்ள முடியாது. மூச்சுப்பயிற்சி என்பது நுரையீரலுக்கான ஒரு பயிற்சி. அதை சிகிச்சை என்று சொல்லமுடியாது. ஆஸ்துமா என்பது மூச்சுக்குழாய் மூடிக்கொள்வது. அதை திறப்பதற்கு வேண்டுமானால் மூச்சுப்பயிற்சி உதவலாமே தவிர, அதை சரி செய்வதற்கு உதவாது. மூச்சுப்பயிற்சி செய்தால் நுரையீரலின் செயல் திறன் நன்றாக இருக்கும். இதனால் மூச்சு வாங்கும்போது நெஞ்சுக்கூடு உள்ளே சென்று சென்று வருவது குறையும்.

மூச்சுப்பயிற்சி

குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை பஃப் பயன்படுத்தலாம். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அவர்களாகவே மெடிக்கல் ஷாப்பில் வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. ஆஸ்துமாவுக்கான மாத்திரை சாப்பிடும்போது அது உணவுடன் செரிமானமாகி ரத்தத்தில் கலந்து நுரையீரலில் இருக்கிற ஆயிரக்கணக்கான காற்று அறைகளுக்குள் செல்வது மிகவும் கடினம். அதற்காகத்தான் மருத்துவர்கள் நாங்கள் பஃப் பயன்படுத்த சொல்கிறோம். மாத்திரை பயன்படுத்தினால் ஆஸ்துமா கட்டுப்பட நீண்ட நாட்கள் எடுக்கும்.

சிறு குழந்தைகளுக்குச் சளி அதிகமாகிவிட்டால், மருத்துவமனைகளில் வைக்கிற நெபுலைசரும் பஃபும் ஒரே மாதிரியான மருந்துதான். ஒரே மாதிரியான சிகிச்சைதான். குழந்தைகளால் பஃபில் இருக்கும் மருந்தை உள்ளிழுக்கத் தெரியாது என்பதால் நெபுலைசர் வைக்கிறோம்.

இருக்கும். இது, குளிர்ந்த சூழலில் இருக்கும்போது சூடாக ஒன்று சாப்பிட்டால் கொஞ்சம் பெட்டராக உணர்வதுபோல. இது அவர்களுடைய மனம் சம்பந்தப்பட்டது. இதனால் எந்தக் கெடுதலும் நிகழப் போவதில்லை. அதே நேரம் நீராவிப்பிடிக்கும் நீரில் எதையும் சேர்க்காமல் வெறும் தண்ணீரை ஆவி பிடித்தாலே போதும்.

நீராவி

சோஷியல் மீடியாக்களில் வருவதுபோல, இந்த ஜூஸ் குடித்தால் நுரையீரல் சுத்தமாகும் என்பதில் எல்லாம் உண்மையில்லை. நல்லக் காற்றைச் சுவாசிப்பது, நிறைய தண்ணீர் குடிப்பதுதான் நுரையீரலைச் சுத்தம் செய்ய நல்ல வழிகள். தவிர, ஆன்ட்டி ஆக்சிடன்ட் நிறைந்த ஆரஞ்சு, மாதுளம் பழம் போன்றவற்றைச் சாப்பிட்டு வந்தாலும் நுரையீரல் நன்றாக இருக்கும்.

காசநோய் காற்றில் பரவுகிற ஒரு நோய். இந்தியாவில் மக்கள்தொகை அதிகம். மக்கள் நெருக்கமாக வசிக்கிற இடங்களில் சிலருக்குக் காசநோய் இருந்தாலும், பலருக்கும் அது பரவி விடும். காசநோய் வந்தவர்களில் பாதி பேர் சிகிச்சை எடுப்பதில்லை. அப்படியே எடுப்பவர்களும் சிகிச்சையைப் பாதியிலேயே விட்டுவிடுகிறார்கள். இவர்கள் முகக்கவசமும் அணிவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தெருவிலேயே எச்சில் துப்புகிறார்கள். அதில் இருக்கிற கிருமிகள் நம்மையும் தொற்றிக்கொள்ளும். நமக்கு வயதாகும்போதோ அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போதோ காச நோய் வந்துவிடலாம்.

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் அதிகமாக இருப்பதால்தான் அரசாங்கம் அவர்களுக்கு இலவசமாக மருந்து தருகிறது. போன் செய்து மாத்திரை போட்டீர்களா என்றுகூட விசாரிக்கிறது. காசநோய் வந்தவர்களுக்கு மாதம் 500 ரூபாய் தருகிறது அரசாங்கம். ஆனாலும் காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது.

காசநோய்

குழந்தைகளுக்குத் தொடர் இருமல், காய்ச்சல் இருக்கும்போது ’பிரைமரி காம்ப்ளக்ஸ்' பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்டறிய மாண்டோ பரிசோதனை மற்றும் நெஞ்சுப்பகுதி எக்ஸ்ரே எடுப்பார்கள். மாண்டோ பரிசோதனை (Mantoux Test) என்பது, காசநோய் பாக்டீரியாவை ஊசி வழியாக குழந்தைகளின் கையின் மேல் தோலில் செலுத்துவது. குழந்தைக்குத் தொற்று இருந்தால் ஊசிப்போட்ட இடத்தில் வீங்கிய சிவப்பு நிறத்திட்டு ஏற்படும். அதை வைத்து குழந்தைக்குத் தொற்று வந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியுமே தவிர்த்து காசநோய் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. அந்தப் பரிசோதனை பாசிட்டிவாக இருந்தால் காசநோய் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. நெகட்டிவ் என்றால் காசநோய் இல்லை என்றும் அர்த்தமில்லை. இந்தியாவில், காசநோய்க்கு எதிரான பி சி ஜி தடுப்பூசி குழந்தைகளுக்குப் போடப்படுகிறது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்’’ என்கிறார் டாக்டர் ராமச்சந்திரன்.

நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்குச் சிகிச்சையளிப்பதில், சேலம் காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோய் நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் எம்.வி. ராமச்சந்திரன் மிகச்சிறந்த அனுபவமிக்கவர். மேலேயுள்ள கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ இருக்கும்பட்சத்தில், டாக்டர் எம்.வி. ராமச்சந்திரனிடம் ஆலோசனை பெறுவதற்கான அப்பாயின்ட்மென்ட் லிங்க் இதோ - https://www.kauveryhospital.com/doctors/salem/pulmonology/dr-m-v-ramachandran/

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

`பரபரப்பாக வேலை செய்யும் ஆண்களே!' இந்தச் சத்து குறைவாக இருக்கிறதா? - வெளிவந்த ஆய்வு

இவ்வுலகில் கார்ப்பரேட் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அனைவரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிற்பதற்குக்கூட நேரம் இல்லாமல் வேலை நிமித்தம் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் அவரவர் உடல் நிலையை கவனி... மேலும் பார்க்க

Vikatan Explainer: வெறும் தண்ணீரில் ஆரம்பித்து மட்டன் வரை... எத்தனை டயட்? அத்தனையும் பாதுகாப்பானதா?

'வெயிட் லாஸ் செய்யணும்', 'மாவுச்சத்தைக் குறைக்கணும்', 'புரதம் அதிகமிருக்கிற உணவுகள் சாப்பிடணும்', 'நல்ல கொழுப்பு கட்டாயம் சாப்பிடணும்', 'கலர்ஃபுல்லா சாப்பிட்டா கேன்சர் வராம தடுக்கலாம்' - இப்படி உடல் எ... மேலும் பார்க்க

Health: சாலையோரக் கடைகளில் காளான் சாப்பிடப்போறீங்களா? ஊட்டச்சத்து நிபுணர் சொல்றத கேளுங்க!

சாலையோரக் கடைகளில் காளான் உணவுகள் அதிகரித்துவிட்டது. 'ஒரு காளான்' என்றால், எண்ணெய் மிதக்கும் காளான் கிரேவியைச் சூடான தவாவில் போட்டு சூடாக்கி, கொதிக்கக் கொதிக்க பேப்பர் பிளேட்டில் போட்டு மேலே பொரிந்த க... மேலும் பார்க்க

Rabies : 50 நாளில் 77,540 நாய்க்கடி சம்பவங்கள்; 3 ரேபிஸ் மரணங்கள் - என்னதான் தீர்வு? | In-Depth

நாய்க்கடியும், அதனால் வருகிற ரேபிஸ் தொற்றும், அதன் தொடர்ச்சியான மரணங்களும் தமிழக அளவில் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கோவையில் நாய்க்கடிக்காக சிகிச்சைப் பெற்றுகொண்டிருந்த புலம்... மேலும் பார்க்க

'சுடு நீரினை மட்டும் குடித்து வந்துள்ளார்' - Youtube பார்த்து டயட்; 18 வயது பெண் உயிரிழந்த பரிதாபம்!

கேரள மாநிலம், கண்ணூர் அடுத்த கூத்துபரம்பாவைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா. 18 வயது இளம்பெண்ணான ஸ்ரீ நந்தா அதிக அளவில் உணவு உட்கொள்ளும் பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது எடை கிடுக... மேலும் பார்க்க

`59% இந்தியர்கள் 6 மணிநேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர்' - அதிர்ச்சி தரும் அறிக்கை!

இந்திய அளவிலான மக்களின் தூக்க முறைகள் பற்றிய கணக்கெடுப்பு, 59 விழுக்காடு மக்கள் 6 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர் என்றும், வார இறுதிகளில் இந்த விழுக்காடுபாதியாகக்குறைவதாகவும் தெரிவி... மேலும் பார்க்க