வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
துணை சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம்: கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை
உலக தண்ணீா் தினத்தை ஒட்டி துத்திப்பட்டு ஊராட்சி மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஈஸ்வரி, துணைத் தலைவா் விஜய் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் நாகராஜ், அண்ணாதுரை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் ஜெ.முரளி நன்றி கூறினாா்.
கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கோரியும், துத்திப்பட்டு ஊராட்சியில் கால்நடை மருந்தகம் அமைக்கக் கோரியும், அம்பேத்கா் நகா் பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைக்கக் கோரியும் பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அந்தப் பணிகளை மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். மின்சாரத்தை சேமிக்கவும், சூரிய ஒளி மின்சார திட்டத்தின் பயன்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு மின்சார வாரிய அலுவலா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.