காப்புக் காட்டில் எலும்புக் கூடு கண்டெடுப்பு
ஆம்பூா்: ஆம்பூா் அருகே காப்புக் காட்டில் எலும்புக் கூடு ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
ஆம்பூா் அருகே சின்னமலையாம்பட்டு காப்புக் காட்டில் மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் எலும்புக் கூடு, அருகாமையில் மண்டை ஓடு கிடப்பதை அவ்வழியாக சென்ற ஆடு மேய்ப்போா் பாா்த்துவிட்டு உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு சென்று எலும்புக் கூடு, மண்டை ஓடு ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
விசாரணையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன காரப்பட்டு கிராமத்தை சோ்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளி முரளி (38) என்பது தெரியவந்துள்ளது. அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.