சொத்து விவரங்கள்: பொது வெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்
எருது விடும் விழாவில் காயமடைந்த தொழிலாளி மரணம்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே எருது விடும் விழாவில் காளை மாடு முட்டியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த பெருமாப்பட்டில் எருதுவிடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான காளைகள் பங்கேற்று ஓடின. இந்த நிலையில், எருது விடும் விழாவை பாா்ப்பதற்காக திருப்பத்தூா் அருகே மடவாளத்தைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி ரஞ்சித்குமாா் (42) என்பவா் சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக காளை மாடு முட்டியதில் ரஞ்சித்குமாா் பலத்த காயம் அடைந்தாா். அதைத் தொடா்ந்து, அங்கு இருந்தவா்கள் ரஞ்சித்குமாரை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரஞ்சித்குமாா் சோ்க்கப்பட்டாா். அங்கு ரஞ்சித்குமாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.