மாநிலங்களவை: வக்ஃப் மசோதாவுக்கு எதிராக அதிமுக வாக்களிப்பு! அன்புமணி, ஜி.கே. வாசன...
Amma's Pride: `திருநங்கை திருமணம்' முதல் அங்கீகாரம்.. போராட்டம் குறித்த ஆவணப்படம் வெளியீடு
வாழ்வாதரத்திற்கும், அங்கீகாரத்திற்கும் ஏங்கும், போராடும் திருநர் சமூகத்தில் ஒரு திருநங்கைக்கு கல்வி, வேலை, திருமணம் அனைத்தும் 'எளிதில்' கிடைத்துள்ளது, நடந்துள்ளது.
'எளிதில்' என்ற வார்த்தையின் பொருள் நமக்கும், திருநர் சமூகத்திற்கும் மாறுபடும். உதாரணத்திற்கு, நமக்கு சொகுசு காரில் செல்வது எளிது என்றால் திருநர் சமூகத்தினருக்கு எந்த ஏச்சும், பேச்சும், அருவருப்பு பார்வையும் இல்லாமல் சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் காலில் தார் சாலையில் நடந்துசெல்வது எளிது.
அப்படியான 'எளிது' தூத்துக்குடியைச் சேர்ந்த 25 வயதான திருநங்கை ஸ்ரீஜாவிற்கு கிடைத்துள்ளது.

மேலே கூறியுள்ளதுப்போல கல்வி, வேலை, திருமணம் எல்லாமே கிடைத்துள்ளது. அது 'வெறும்' கிடைத்துள்ளதாக இல்லாமல், 'அங்கீகரிப்பட்டதாக' அனைத்தும் கிடைத்துள்ளது.
இதன் அத்தனைக்கும் பின்னால், ஶ்ரீஜாவின் அம்மா வள்ளியின் உற்றத்துணை இருந்துள்ளது.
நாம் ஜிப்லி காலத்தில் சூழன்று கொண்டிருந்தாலும் கூட, இன்னமும் திருநர்களை ஏற்றுகொள்ளும் மனபக்குவம் நம் சமுதாயத்திற்கு வந்துவிடவில்லை. இன்னும் அவர்கள் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
அவர்களின் இந்தப் போராட்டம் எடுத்த உடனேயே சொந்த குடும்பத்துடன் தான் தொடங்குகிறது. 'இப்படி ஒரு மகன் அல்லது மகள் எங்களுக்கு இருக்கிறார்' என்பதை ஆசை ஆசையாய் வளர்த்த பெற்றோர்களாலேயே ஏற்றுகொள்ள முடியவில்லை. இதனால், திருநர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். சரியாக சொல்ல வேண்டுமானால் துரத்தப்படுகிறார்கள்.
ஆனால், இதற்கு முரணாக ஶ்ரீஜாவின் தாய் வள்ளி ஶ்ரீஜாவை வாரி அணைத்துகொண்டதோடு, அவரது அங்கீகாரத்திற்காக போராடி வெற்றியும் பெற்றுள்ளார்.
2017-ம் ஆண்டு ஶ்ரீஜா - அருணுக்கு இடையே மலர்ந்த காதல் 2018-ம் ஆண்டு திருமணம் என அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஆனால், இந்த காதல் மனங்களின் திருமணத்தை சட்டம் அங்கீகரிக்கவில்லை.

ஆனால், அதை அப்படியே விட்டுவிடவில்லை ஶ்ரீஜாவும், அருணும். சட்டப்போராட்டத்தை தொடங்கினார். அதுவரை ஶ்ரீஜாவின் பாலின மாற்றம், அவமதிப்புகள் என அனைத்திலும் ஆறுதலாகவும், ஆதரவாகவும் நின்ற வள்ளி, இந்த சட்டப்போராட்டத்திலும் தோளோடு தோள் நின்றுள்ளார்.
இந்தப் போராட்டத்திற்கான வெற்றியாக 2019-ம் ஆண்டு ஶ்ரீஜா - அருண் திருமணத்தை அங்கீகரித்தது சென்னை உயர் நீதிமன்றம். ஆக, ஶ்ரீஜாவின் திருமணம் தான் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட முதல் திருநங்கை திருமணம்.
ஶ்ரீஜா, அவரது அம்மா வள்ளி, திருமண போராட்டம் என அனைத்தையும் உள்ளடக்கி 'அம்மா'ஸ் பிரைட்' என்ற ஆவணப்படம் வெளியாகி உள்ளது. அதில் ஶ்ரீஜாவும், அவரது அம்மாவும் அனைத்து போராட்டாங்களையும், அவர்களாகவே விளக்கியுள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
