கார் பந்தயங்களை முடித்த அஜித் வீடு திரும்பினார்!
நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பின்போதே கார் பந்தயங்களில் கலந்துகொள்ள பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் துபையில் நடைபெற்ற 24 ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியா சார்பில் ’அஜித்குமார் ரேஸிங்’ என்கிற பெயரில் நடிகர் அஜித் குமார் தன் குழுவினருடன் கலந்துகொண்டார்.

அங்கு நடைபெற்ற 911 ஜிடி3 ஆர் என்கிற கார் பந்தயப் பிரிவில் அஜித் குமார் ரேஸிங் (901) அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். அஜித் அணிக்கு 'ஸ்பிரிட் ஆப் தி கேம்' விருது வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இத்தாலியில் நடைபெற்ற முகெல்லோ 12 ஹெச் ரேஸில் மார்ச் 23 அன்று அஜித் குமார் ரேஸிங் அணி கலந்துகொண்டது.
தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் ஜிடி992 பிரிவில் களமிறங்கிய அஜித் அணி மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்தியது.
கார் பந்தயப் பிரியராக மட்டுமல்லாமல் அடுத்தடுத்து இரண்டு பந்தயங்களில் வெற்றி பெற்றதால் ரசிகர்கள் அஜித்தைப் பாராட்டி வருகின்றனர்.
Welcome Back Chief..
— Prakash (@prakashpins) April 2, 2025
OG Returns to Chennai!#GoodBadUgly#AjithKumarpic.twitter.com/lszXNJIJeI
இந்த நிலையில், கார் பந்தயங்களை முடித்த அஜித் சென்னை திரும்பியுள்ளார். இவர் நடித்த குட் பேட் அக்லி ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படிக்க: நானி படத்தில் சிறப்பு தோற்றத்தில் கார்த்தி?