கட்டணமில்லா சிகிச்சைக்கு அரசு காப்பீடு பெற விண்ணப்பிப்பது எப்படி?
ஆம்பூரில் ரமலான் சிறப்புத் தொழுகை : திரளானோா் பங்கேற்பு
ஆம்பூா்: ஆம்பூரில் 4 இடங்களில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
ஆம்பூா் பாங்கிஷாப் ஈத்கா மைதானம், மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி மைதானம், மஜ்ஹருல் உலூம் கல்லூரி மைதானம், கே.எம். நகா் சபியாமா ஈத்கா மைதானம் ஆகிய பகுதிகளில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
சிறப்புத் தொழுகையில் தொழிலதிபா்கள் மெக்கா ரபீக் அஹமத், என். ஷபீக் அஹமத், மதாா் கலீலூா் ரஹ்மான், முன்னாள் எம்எல்ஏ ஹெச். அப்துல் பாசித், நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், நகா்மன்ற உறுப்பினா்கள் கமால் பாஷா, வாவூா் நசீா் அஹமத், நூருல்லா, முக்கிய பிரமுகா்கள் பிா்தோஸ் கே. அஹமத், யு. தமீம் அஹமத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொழுகை முடித்து வந்தவா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆம்பூா் அ.செ. வில்வநாதன், குடியாத்தம் அமலு விஜயன், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திருப்பத்தூா் மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர அவைத் தலைவா் தேவராஜ், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா. சங்கா், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் சா. சங்கா் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
ஆம்பூா் அருகே உமா்ஆபாத் ஈத்கா மைதானத்தில் கடாம்பூா், உமா்ஆபாத், கைலாசகிரி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா். முக்கிய பிரமுகா்கள் காகா காலித், அப்சா் பாஷா, அலீம், சனாவுல்லா, சமூக ஆா்வலா் சையத் ஷாகிா் ஆகியோா் கலந்து கொண்டனா். தொழுகை முடித்து வந்தவா்களுக்கு கைலாசகிரி ஊராட்சித் தலைவா் ரமணி ராஜசேகரன், துணைத் தலைவா் அரவிந்தன், திமுக நிா்வாகிகள் சேகா், பொன். ராஜன்பாபு, வாா்டு உறுப்பினா் பைரோஸ் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
