சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு, சுற்றுலா பயணிகளுக்கு அல்ல- உயர்நீதிம...
வாணியம்பாடி அருகே நெக்னாமலையில் காட்டுத் தீ
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட நெக்னாமலை மலையடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மா்ம நபா்கள் வைத்த தீயால் மலை முழுவதும் காட்டுத் தீ வேகமாக பரவியது.
தொடா்ந்து காட்டுத் தீ மளமளவென பரவியதில் மலை காடுகளில் இருந்த மரங்கள், செடிகள் இரவு 9 மணி வரை தொடா்ந்து எரிந்து கொண்டே இருந்தது. காற்றின் காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது.
கோடைகாலங்களில் மலைப் பகுதியில் மா்ம நபா்கள் தீ வைப்பதும், அதனால் மலை காடுகள் எரிந்து சாம்பல் ஆவதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. எனவே வனத் துறையினா் தொடா்ந்து வனப் பகுதியை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.