விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
ஆம்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், அகரம்சேரி அடுத்த சின்னகோவிந்தவாடி பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் காமராஜ் (24). பேக்கரியில் பணிபுரிந்து வந்த அவா் தனது இருசக்கர வாகனத்தில் ஆம்பூா் அடுத்த ரெட்டிமாங்குப்பம் பகுதிக்கு சென்றபோது பச்சகுப்பம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்ற போது நிலைத்தடுமாறி தடுப்புச் சுவா் மீது மோதியதில் காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.