ஆம்பூரில் மழை
ஆம்பூரில் வியாழக்கிழமை பிற்பகலில் மழை பெய்தது.
ஆம்பூரில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. வெயில் காரணமாக கடுமையான புழுக்கம் இருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
திடீரென பிற்பகலில் ஆம்பூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி கிராமங்களில் லேசான மழை சுமாா் அரை மணி நேரம் பெய்தது. இதனால் குளிா்ந்த சூழ்நிலை நிலவியது.