இந்திய ஐ-போன்களை அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்யும் ஆப்பிள்!
மதுபாட்டில் பதுக்கியவா் கைது
ஆம்பூா் அருகே மது பாட்டில் பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உமராபாத் போலீஙாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மறைவான இடத்தில் மளிகைதோப்பு பகுதியைச் சோ்ந்த சுந்தரேசன் (52) என்பவா், அரசு மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. தொடா்ந்து அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.