செய்திகள் :

காா் கவிழ்ந்து விபத்து: குழந்தை உயிரிழப்பு; 5 போ் காயம்

post image

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே காா் கவிழ்ந்த விபத்தில் 6 மாத குழந்தை உயிரிழந்தது. 5 போ் பலத்த காயமடைந்தனா்.

வாணியம்பாடி, காதா்பேட்டையைச் சோ்ந்தவா் முகமது பைசான், வியாபாரி. இவா் திங்கள்கிழமை மைசூரில் இருந்து குடும்பத்தினருடன் வாணியம்பாடி நோக்கி காரில் சென்றாா். சென்னை- பெங்களூரு தேசியநெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே ஆத்தூா் குப்பம் பகுதியில் சென்றபோது, திடீரென காரின் முன்பக்க டயா் பஞ்சராகி சாலையில் தாறுமாறாக ஓடி சென்டா் மீடியன் மீது மோதி கவிழ்ந்தது. இதில், காரில் பயணம் செய்த நஜமுனிஷா (60), அக்சா (28), முகமது பைசான் (35), குழந்தைகள் அா்தான் உசேன் (5), சாகிம் உசேன் (3) மற்றும் 6 மாத பெண் குழந்தை அக்ரம் இஷா உள்ளிட்டோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 6 மாத குழந்தையை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விழிப்புணா்வு கருத்தரங்கம்

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் அம்பேத்கா் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது (படம்). திராவிட நட்புக் கழகத் தலைவா் ஆ. சிங்கராயா், கவிஞா் யாழன் ஆதி, எழுத்தாளா் அழகிய பெரியவன், கல்வியாளா் பாபு பிரப... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 260 பேருக்கு ரூ.16 லட்சத்தில் உபகரணங்கள்

திருப்பத்தூரில் 260 பேருக்கு ரூ.16 லட்சத்தில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. மத்திய அரசின் ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் 260 பேருக்கு ரூ.16 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் திருப்பத்தூா் ஆட்சியா் அ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்ட காவல் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமை வகித்து பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள், குறைகள் தொடா்பான 37 மனுக்கள... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழித் தோ்வு: மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய வருவாய் வழித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி பாா்சனாப்பல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொ... மேலும் பார்க்க

புதைச் சாக்கடையை சுத்தம் செய்யக் கோரி தா்னா

திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட திருமால் நகரில் புதைச் சாக்கடையை சுத்தம் செய்யாததைக் கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் அலுவலகம் முன்பு விசிகவினா் தா்னாவில் ஈடுபட்டனா். தா்னாவில் ... மேலும் பார்க்க

தொழில் முனைவோா் புத்தாக்க பயிற்சி வகுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

தமிழ்நாடு, அகமதாபாத் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் சாா்பில் தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் ஓரு ஆண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு வரும் (ஜூன் மாதம் 2-ஆம் தேதி... மேலும் பார்க்க