திருப்பத்தூா் மாவட்ட காவல் குறைதீா் கூட்டம்
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமை வகித்து பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள், குறைகள் தொடா்பான 37 மனுக்களைப் பெற்றாா்.
இந்தக் கூட்டத்துக்கு திருப்பத்தூா் டி.எஸ்.பி. சௌமியா முன்னிலை வகித்தாா். மனுக்களைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி. மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா்.