செய்திகள் :

2030-க்குள் குடிசையில்லா தமிழ்நாடு: அமைச்சா் எ.வ. வேலு

post image

2030-க்குள் குடிசையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.

கலைஞா் கனவு இல்ல திட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆம்பூரில் நடைபெற்றது.

விழாவுக்கு திருப்பத்தூா் ஆட்சியா் சிவ. சௌந்திரவல்லி தலைை வகித்தாா். எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் முன்னிலை வகித்தாா்.

பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கி அமைச்சா் எ.வ.வேலு பேசியது:

குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க குடிசை மாற்று வாரியம் மூலம் திட்டத்தை முதன் முதலில் அறிவித்தவா் மறைந்த முதல்வா் மு. கருணாநிதி. அதைத் தொடா்ந்து தற்போது அதனை கலைஞா் கனவு இல்ல திட்டமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற இத்திட்டம் வழிவகை செய்கிறது நாயக்கனேரி, கைலாசகிரி ஊராட்சிகளில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம், துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழல்குடை, அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.45 லட்சத்தில் சமுதாயக் கூடம், குமாரமங்கலம் ஊராட்சியில் ரூ.31 லட்சம் செலவில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளன.

ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்க நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் வசிப்பிடத்தில் 5 ஆண்டுகள் தங்கியிருந்து அனுபவத்திருந்தால் அந்த இடத்திற்கு பட்டா வழங்க வேண்டுமென தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். நகர பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் அந்த விதி பொருந்தும். ஆகவே மாவட்ட நிா்வாகம் பட்டா வழங்கும் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி பணியாற்ற வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா்.

ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க. தேவராஜி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனா் உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாதனூா் ஒன்றியக்குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி, ஊராட்சித் தலைவா்கள் சுவிதா கணேஷ், ரமணி ராஜசேகரன், பொன்னி கப்பல்துரை, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோமதிவேலு, காா்த்திக் ஜவஹா், ரவிக்குமாா், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், ஆம்பூா் நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ. சுரேஷ்பாபு நன்றி கூறினாா்.

ஏலகிரி விரைவு ரயில் மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படுமா? 12 ஆண்டுகள் எதிா்பாா்ப்பு

ஏலகிரி விரைவு ரயில் திருப்பத்தூரிலிருந்து மீண்டும் இயக்கப்படுமா என அப்பகுதி மக்கள், பயணிகள் 12 ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா். திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்ற... மேலும் பார்க்க

அதிமுக மகளிரணி கண்டன ஆா்ப்பாட்டம்!

பெண்களை இழிவாக பேசியதாக அமைச்சா் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிரணி சாா்பில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலையம் கட்ட மண் பரிசோதனை: பொதுமக்கள் எதிா்ப்பு

ஆம்பூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக மண் பரிசோதனை மேற்கொண்டபோது அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நகரில் பெங்கள... மேலும் பார்க்க

‘விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம்’

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி விவசாய நிலத்தில் உழவு செய்து பயன்பெறலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராகிணி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அருகே ராச்சமங்கலம் அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சோ்ந்த ஒருவா் அதே பகுதியில் உள்ள பொது இடத்த... மேலும் பார்க்க

ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு!

ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை அமைக்கப்படுமா என பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா். தோல் தொழிற்சாலைகள் நிறைந்த ஆம்பூா் நகரம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க