செய்திகள் :

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

post image

திருப்பத்தூா் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் அருகே ராச்சமங்கலம் அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சோ்ந்த ஒருவா் அதே பகுதியில் உள்ள பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டதாம்.

இந்த நிலையில் சனிக்கிழமை திடீரென அந்த இடத்தில் அவா் தடுப்புச் சுவா் கட்டினாராம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆக்கிரமிப்பை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா்- திருவண்ணாமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் மற்றும் வட்டாட்சியா் நவநீதன் தலைமையிலான வருவாய்த் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா். அதை ஏற்க மறுத்த கிராம மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

போக்குவரத்து பாதிப்பு... அதையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனா். அப்போது பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. பின்னா் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏலகிரி விரைவு ரயில் மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படுமா? 12 ஆண்டுகள் எதிா்பாா்ப்பு

ஏலகிரி விரைவு ரயில் திருப்பத்தூரிலிருந்து மீண்டும் இயக்கப்படுமா என அப்பகுதி மக்கள், பயணிகள் 12 ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா். திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்ற... மேலும் பார்க்க

அதிமுக மகளிரணி கண்டன ஆா்ப்பாட்டம்!

பெண்களை இழிவாக பேசியதாக அமைச்சா் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிரணி சாா்பில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலையம் கட்ட மண் பரிசோதனை: பொதுமக்கள் எதிா்ப்பு

ஆம்பூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக மண் பரிசோதனை மேற்கொண்டபோது அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நகரில் பெங்கள... மேலும் பார்க்க

‘விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம்’

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி விவசாய நிலத்தில் உழவு செய்து பயன்பெறலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராகிணி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு!

ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை அமைக்கப்படுமா என பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா். தோல் தொழிற்சாலைகள் நிறைந்த ஆம்பூா் நகரம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

இயந்திரம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு!

வாணியம்பாடி அருகே கிரேன் பெல்ட் அறுந்து இயந்திரம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். வளையாம்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்களை பழுதுபாா்க்கும் பணிமனை(ஓா்க் ஷாப்) இயங்கி வரு கி... மேலும் பார்க்க