செய்திகள் :

Good Bad Ugly: ``இந்தப் படத்தை எடுக்கும்போது பயம்தான் அதிகமாக இருந்தது!'' - ஆதிக் ரவிச்சந்திரன்

post image

அஜித் நடித்திருக்கும் `குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற வியாழக்கிழமை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, சுனில், அர்ஜூன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

`விடாமுயற்சி' படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துடன் த்ரிஷா நடித்திருக்கிறார்.

Good Bad Ugly - GBU Mamey Song
Good Bad Ugly - GBU Mamey Song

அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள `குட் பேட் அக்லி' படத்தில் ஆழமான எமோஷனும் இருக்கிறதாம். விகடனுக்கு அளித்தப் பேட்டியில் தனது ஆதர்ச நாயகன் அஜித்தை வைத்து இயக்கிய அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

நம்மிடையே பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ``நான் சாருடைய மிகப் பெரிய ரசிகன். ஐடியா கிடைக்கும்போதெல்லாம் அதை எழுதி வச்சிட்டேன். முக்கியமாக, எனக்கு `குட் பேட் அக்லி' பயணம் ரொம்பவே எமோஷனலானது.

அஜித் சார்கூட படப்பிடிப்பு தளத்துல இருந்ததை என்ஜாய் பண்ணினேன். ஆனால், அவருக்கு கதைச் சொல்லப்போறப்போ ரொம்ப பயம் எனக்குள்ள இருந்துச்சு.

குட் பேட் அக்லி திரைப்படம்
குட் பேட் அக்லி திரைப்படம்

நம்ம சொல்ற கதை சாருக்கு பிடிக்கணும்னு முதல்ல பயம் இருந்தது.

நான் சொன்ன கதைக்கு சார் ஓகே சொன்னதும் கதையை நல்ல படமாக எடுத்திடணும்னு பயம் இருந்தது.

சொல்லப்போனால், முழுக்க முழுக்க பயம் மட்டும்தான் இருந்தது. அதுபோல எனக்கு சந்தோஷமும் இருந்தது. ஆனால், அதைவிட அதிகமாக எனக்குள்ள பயம் மட்டும்தான் இருந்தது.

அதே சமயம் இந்த வாய்ப்பு எனக்கு பொறுப்பையும் கொடுத்துச்சு. என்னுடைய படப்பிடிப்பு தளம் எப்போதுமே கலகலப்பாக இருக்கும். அஜித் சாருமே ரொம்ப ஜாலியாக இருந்தாரு. இரவும் பகலும் உழைக்கணும். அதை சந்தோஷமாக பண்ணுவோம் அப்படிங்கிறதுதான் எங்களுடைய எண்ணம்.

நான் ரொம்பவே நிம்மதியாக வேலை பார்த்த திரைப்படம் `குட் பேட் அக்லி'தான். இந்தப் படத்தோட கதையைக் கேட்டதுமே `நல்லாயிருக்கு! இதை நம்ம படமாக உடனடியாகப் பண்ணுவோம்'னு சொன்னாரு.

ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவிச்சந்திரன்

கதை சொன்னதுக்குப் பிறகு அத்தனை வேலைகளும் பொறுமையாக நடக்கும்னுதான் நான் நினைச்சேன். ஆனால், அன்னைக்கு இரவுக்குள்ளவே படத்துல நடிக்கவிருக்கிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்னு எல்லா விஷயங்கள் பற்றியும் பிளான் பண்ணினோம்.

அப்போவே , மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு கால் பண்ணி பேசிட்டாரு. இந்த வேலைகளெல்லாம் முடிஞ்சு இரண்டே மாசத்துல ஷூட் போயிட்டோம்." எனக் கூறினார்.

Bombay: `பாம்பே படம் இன்று வெளியானால்... நாட்டின் சகிப்புத்தன்மை?’ - ராஜீவ் மேனன் ஓப்பன் டாக்

மணிரத்னத்தின் 'பாம்பே' படம் இன்று திரையரங்குகளில் வெளியானால் பெரும் சவால்களை சந்திக்கும். அந்தளவு இந்தியா சகிப்புத் தன்மையில்லாத நாடாக மாறிவருகிறது என பாம்பே படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தெரிவி... மேலும் பார்க்க

XEV 9E: "இந்த காருக்கான சவுண்டை நாங்கள் உருவாக்கினோம்" - ரஹ்மானின் இன்ஸ்டா பதிவு வைரலாக காரணம் என்ன?

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய EV-BE6, XEV 9E கார்களை அறிமுகப்படுத்தியது. இந்த BE6 மற்றும் XEV 9E-யின் ஒலி வடிவமைப்பில் ஆஸ்கர் நாயகன் AR ரஹ்மானும் பணியாற்றியிருக்கிறார். இது தொடர்பாக அவர் முன்பு வெளியி... மேலும் பார்க்க

Thug Life: "நான் ராமர் இல்ல; ராமரின் அப்பா வகையறா" - திருமணம் குறித்த கேள்விக்குக் கமல் ஹாசன் பதில்

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்ட... மேலும் பார்க்க