ரூ.244 கோடி வரி பாக்கி: யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்
2000 ரன்களைக் கடந்த நிக்கோலஸ் பூரன்! ஐபிஎல் தொடரில்..!
ஐபிஎல் தொடரில் 2000 ரன்களைக் கடந்து லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் இன்றையப் போட்டியில் லக்னௌ - கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 238 ரன்கள் குவித்து கொல்கத்தா அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்தது.
அதிரடியாக விளையாடிய மிட்சல் மார்ஷ் 81 ரன்களும் (6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்), நிக்கோலஸ் பூரன் 87 ரன்களும் (7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) குவித்தனர்.
இதையும் படிக்க: மார்ஷ், பூரன் அரைசதம் விளாசல்: கொல்கத்தாவுக்கு 239 ரன்கள் இலக்கு
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில் மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடியுள்ள பூரன், மூன்று அரைசதங்களுடன் 288 ரன்களைக் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு நிறத் தொப்பியையும் தன்வசமாக்கியுள்ளார்.
தன்னுடைய 7-வது ஐபிஎல் தொடரில் விளையாடும் நிக்கோலஸ் பூரன் 81 போட்டிகளில் விளையாடி 2057 ரன்களைக் குவித்துள்ளார். இந்தப் போட்டியில் 2000 ரன்களை எட்டுவதற்கு அவர் 1198 பந்துகளை எடுத்துக் கொண்டுள்ளார்.
ஆன்ரே ரஸ்ஸல் அதிவேகமாக1120 பந்துகளில் 2000 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தார். அவருக்கு அடுத்ததாக இந்திய வீரர் விரேந்திர சேவாக் 1211 பந்துகளிலும், கிறிஸ் கெயில் 1251 பந்துகளிலும், ரிஷப் பந்த் 1306 பந்துகளிலும், மேக்ஸ்வெல் 1309 பந்துகளிலும் 2000 ரன்களை எட்டியவர்கள் வரிசையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இதையும் படிக்க: ஏப்.7ஆம் தேதியும் க்ருணால் பாண்டியாவும்..! மல்டிவெர்ஸ் சாதனைகள்!