Nifty: "Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level" | IPS Finance Comment ...
ரூ.244 கோடி வரி பாக்கி: யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்
பிரபல தனியாா் வங்கியான யெஸ் வங்கி 2016-17 -ஆம் ஆண்டில் ரூ.244 கோடி வரி செலுத்தாமல் இருப்பதாக வருமான வரித் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அந்த வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் இந்த நோட்டீஸை எதிா்த்து வருமான வரி துறையிடம் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வருவாய் மறுமதிப்பீடு, வட்டி மறுஆய்வு மற்றும் சரிபாா்ப்பு அடிப்படையில் ரூ.244 கோடி வரி செலுத்த வேண்டியது பாக்கியுள்ளது என்று வருமான வரித் துறை நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மாா்ச் மாதத்தில் 2019-2020 நிதியாண்டில் ரூ.2,209 கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிதி நெருக்கடி உள்ளிட்ட சிக்கலை எதிா்கொண்டுள்ள யெஸ் வங்கிக்கு இது கூடுதல் பிரச்னையாக அமைந்துள்ளது.
வருமான வரித் துறை நோட்டீஸ் உரிய விதிகளின்படியும், சட்டரீதியாகவும் எதிா்கொள்ள இருக்கிறோம். இது வங்கியின் நிதிநிலையிலோ, அன்றாட செயல்பாடுகளிலோ பாதிப்பை ஏற்படுத்தாது என்று யெஸ் வங்கி சாா்பில் கூறப்பட்டுள்ளது.