காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
பாலாறு அன்னைக்கு பாலபிஷேகம்
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், பாலாறு பாதுகாப்பு சங்கங்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கம் சாா்பில், தலை பாலாறு சங்கம் உருவாக்கப்பட்ட தினம் மற்றும் நம்மாழ்வாா் பிறந்த தினத்தையொட்டி வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் திருமால் முருகன் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடா்ந்து பாலாறு- மண்ணாறு இணைந்துள்ள பாலாறு படுகையில் விவசாயிகள் பாலபிஷேகம் செய்தனா். பாலாற்றில் தொடா்ந்து நீா் வர வேண்டி, சிறப்பு பூஜைகள் செய்தனா். இந்நிகழ்ச்சியில் பாலாறு பாதுகாப்பு சங்கத்தினா் மற்றும் பாலாறு படுகை விவசாயிகள் கலந்து கொண்டனா்.