செய்திகள் :

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! மர்ம நபர் மீது வழக்கு!

post image

மும்பையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்பூரிலிருந்து மும்பை நகரத்துக்கு நேற்று (ஏப்.7) இரவு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 225 பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில், விமானம் புறப்பட்ட சுமார் 20 நிமிடங்கள் கழித்து இரவு 7.05 மணியளவில் அந்த விமானத்தின் கழிப்பறையில் கிடந்த கடிதம் ஒன்றை அந்த விமானத்தின் பணியாளர் எடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் ‘திறந்து பார்க்கவும், சர்ப்ரைஸ் உங்களுக்காக ஒரு வெடி குண்டு காத்துக்கொண்டிருக்கிறது இது ஜோக் அல்ல’ என்று அச்சுறுத்தும் வகையில் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இரவு 8.50 மணியளவில் விமானம் மும்பையில் தரையிறங்கியபோது பாதுகாப்புப் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படாததைத் தொடர்ந்து இந்த மிரட்டல் போலியானது என உறுதிச் செய்யப்பட்டது.

மேலும், அந்த மிரட்டல் கடிதத்தை எழுதிய அடையாளம் தெரியாத மர்ம நபர் மீது விமான நிலையத்திலுள்ள காவல் நிலையத்தில் பாரத் நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?

நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்!

நேபாளத்தில் 12 இந்தியர்கள் சென்ற தனியார் விமானம் அவசரமாக காத்மாண்டின் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் உள்நாட்டில் பயணிக்க இயக்கப்படும் சீதா ஏர்லைன்ஸ் எனும் தனியார் நிறுவன... மேலும் பார்க்க

ஹரியாணாவில் அம்பேத்கர் சிலை உடைப்பு! 2 பேர் கைது!

ஹரியாணா மாநிலத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹிஸார் மாவட்டத்திலுள்ள நாங்தலா கிராமத்திலுள்ள ஓரு பூங்காவில் அம்பேத்கர் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில், அம்பேத்... மேலும் பார்க்க

பாங்காக் சென்றதை மறைக்க கடவுச்சீட்டின் பக்கங்களைக் கிழித்த நபர் கைது!

மகாராஷ்டிரத்தின் மும்பை விமான நிலையத்தில் தனது கடவுச்சீட்டின் பக்கங்களைக் கிழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புணே மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் பாலேராவ் (வயது 51) என்ற நபர், கடந்த ஏப்.14 ஆம் தேதி மும்... மேலும் பார்க்க

இபிஎஸ் பெயருடன் வந்த மின்னஞ்சல் மூலம் கேரள அரசு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநில பாலக்காடு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக இன்று (ஏப்.16) காலை வெடி... மேலும் பார்க்க

ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!

யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் முக்கிய இடங்களின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. யேமன் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள பல்வேறு மாகாணங்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையினரின்... மேலும் பார்க்க

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடை நீக்கம்?

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடையானது விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை ஆளும் தலிபான்கள் மீதானத் தடை நீக்கப்பட்டு அந்நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் முயற... மேலும் பார்க்க