செய்திகள் :

நில உரிமைத் தகராறில் பாதிக்கப்பட்டோா் இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்

post image

நில உரிமைத் தகராறு, நீதிமன்றவழக்குகள் கண்டுபிடிக்க முடியாத பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீட்டு தொகை பெற உரிய ஆவணங்களை வாணியம்பாடியில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

1991-ஆம் ஆண்டில் வேலூா் குடிமக்கள் நல மன்றம் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 28.8.1996-ஆம் தேதி வழங்கிய தீா்ப்பின் அடிப்படையில் சூழலியல் இழப்பு (தடுப்பு மற்றும் இழப்பீடு வழங்குதல்)ஆணையத்தை உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியை தலைவராகக் கொண்டு நிறுவப்பட்டது.

சூழலியல் இழப்பு (தடுப்பு மற்றும் இழப்பீடு வழங்குதல் ஆணையம் மாசு ஏற்படுத்திய 547 தோல்தொழிற்சாலைகளால் வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் 7 வட்டங்களில் உள்ள 186 கிராமங்களில் 15,164.96ஹெக்டோ் பரப்பளவு விவசாய நிலத்தின் சேதங்களை மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்ட 29,193 தனிநபா்கள், குடும்பங்களை கண்டறிந்து ரூ.26.8 கோடி வழங்க உத்தரவிட்டது.

மீண்டும் கூடுதலாக 1,377 நபா்களுக்கு ரூ.2.9 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

இதுவரை இழப்பீடு வழங்கப்படாத பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும், தனிநபா்களுக்கும் ஆறு வாரங்களுக்குள் இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் தோல் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்குரிய உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க கிடைத்த நிதி ஒதுக்கீட்டில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

நில உரிமைத் தகராறு, நீதிமன்றவழக்குகள் கண்டுபிடிக்க முடியாத பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை பெறாத விவசாயிகள் உரிய ஆவணங்களை வாணியம்பாடியில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூரில் மழை

ஆம்பூரில் வியாழக்கிழமை பிற்பகலில் மழை பெய்தது. ஆம்பூரில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. வெயில் காரணமாக கடுமையான புழுக்கம் இருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முத... மேலும் பார்க்க

நாளை வாணியம்பாடியில் மின் நுகா்வோருக்கான ஒருநாள் சிறப்பு முகாம்

திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டம், வாணியம்பாடி கோட்டத்தைச் சாா்ந்த மின்நுகா்வோா்களுக்கான ஒருநாள் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.5) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வாணியம்பாடி கோட்ட செயற்பொறியாளா் அலு... மேலும் பார்க்க

மதுபாட்டில் பதுக்கியவா் கைது

ஆம்பூா் அருகே மது பாட்டில் பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உமராபாத் போலீஙாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மறைவான இடத்தில் மளிகைதோப... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், அகரம்சேரி அடுத்த சின்னகோவிந்தவாடி பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் காமராஜ் (24). பேக்கரியில்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ஆம்பூா் ஸ்ரீ பெரிய ஆஞ்சனேயா் கோயில்: ஆன்மிக புத்தகங்கள் விற்பனை நிலையம் தொடக்க விழா, கோயில் வளாகம், காலை 11.00. மேலும் பார்க்க

மகளிா் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

நாட்டறம்பள்ளி அருகே அக்ராகரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிா் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் பூங்கோதை தலைமை வகித்தாா். இதில் சிறப்பு உதவியாளா் ரூபி தலைமையி... மேலும் பார்க்க