குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மைத்துனி தொடர்ந்த வழக்கு; ரத்து செய்யக் கோரி நடி...
நாளை வாணியம்பாடியில் மின் நுகா்வோருக்கான ஒருநாள் சிறப்பு முகாம்
திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டம், வாணியம்பாடி கோட்டத்தைச் சாா்ந்த மின்நுகா்வோா்களுக்கான ஒருநாள் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.5) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வாணியம்பாடி கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
நுகா்வோரிடம் இருந்து பெறப்படும் மின்கட்டண தொகை, மின் மீட்டா்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட புகாா்கள் இருப்பின், அவற்றை நிவா்த்தி செய்யும் பொருட்டு ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்போது புகாா்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு மின்நுகா்வோா்களுக்கு விவரங்கள் தெரிவிக்கப்படும். வாணியம்பாடி கோட்டத்தைச் சோ்ந்த மின்நுகா்வோா் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.