தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
Apollo Cancer Centre: கோல்ஃபிட் (ColFit) என்ற பெயரில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC) அறிமுகம்
இந்தியாவெங்கும் மலக்குடல் புற்றுநோய் (CRC) நேர்வுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ளும் விதத்தில் ஆரம்ப நிலையிலேயே மலக்குடல் புற்றுநோயைக் கண்டறியவும் மற்றும் அது உருவாகாமல் தடுக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு விரிவான நோயறிதல் (ஸ்க்ரீனிங்) செயல்திட்டத்தை கோல்ஃபிட் (ColFit) என்ற பெயரில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC) அறிமுகம் செய்திருக்கிறது.

நோயாளிகளின் உயிர்பிழைப்பு விகிதங்களை மேம்படுத்துவதும், சிகிச்சை செலவுகளை குறைப்பதும் மற்றும் தற்போது மோசமான விளைவுகளுக்கும் மற்றும் அதிக அளவிலான உடல்நல பராமரிப்பு செலவுகளுக்கும் வழிவகுக்கின்ற முதிர்ச்சியடைந்த நிலையில் நோயறிதல் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வதும் இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும். ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும்போது, சிகிச்சையில் குணப்படுத்தக்கூடிய மற்றும் அதிக அளவு வராமல் தடுக்கப்படக்கூடியதாக மலக்குடல் புற்றுநோய் இருப்பினும்,இந்தியாவில் கணிசமான நபர்களுக்கு அது வளர்ந்து முதிர்ச்சியடைந்த நிலைகளில் தான் அடையாளம் காணப்படுகிறது. இதன் காரணமாக, அத்தகைய நபர்கள் உயிர்பிழைப்பு விகிதங்கள் குறைகின்றன மற்றும் சிகிச்சை செலவுகள் அதிகரிக்கின்றன.
வயது முதிர்ந்த மற்றும் இளவயதுள்ள நபர்கள் ஆகிய இரு தரப்பினர் மத்தியிலும் மலக்குடல் புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் செயல்பாட்டை விரிவாக்குவது மீது கோல்ஃபிட் சிறப்பு கவனம் செலுத்துகிறது; ஆரம்ப நிலையிலேயே பாதிப்பைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. மலக்குடல் புற்றுநோய்க்கு இந்தியாவில் வயது - தரநிலைப்படுத்தப்பட்ட விகிதம் (ASR) என்பது, ஒவ்வொரு 100,000 ஆண்களுக்கு 7.2 மற்றும் ஒவ்வொரு 1,00,000 பெண்களுக்கு 5.1 என ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள போதிலும், ஒரு மில்லியனுக்கும் அதிகமாக நமது நாட்டின் மக்கள் தொகை இருக்கும் நிலையில், இந்நோய் பாதிப்பிற்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை கணிசமானது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். மலக்குடல் புற்றுநோய்க்கு இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு உயிர்பிழைக்கும் விகிதம் என்பது அதிகம் அச்சுறுத்துவதாக 40% - க்கும் குறைவானதாக இருக்கிறது; உலகளவில் மிகக் குறைவான விகிதங்களுள் இதுவும் ஒன்றாகும்.

குறிப்பிட்ட சில இந்திய பதிவகங்களில் மலக்குடல் புற்றுநோய்க்கு 5 ஆண்டுகளுக்கு உயிர்பிழைக்கும் விகிதங்கள் கவலை ஏற்படுத்தும் வகையில், சரிவடைந்து வருவதை CONCORD-2 ஆய்வு மேலும் சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலான நேரங்களில் மலக்குடல் புற்றுநோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும்; ஆனால், இவைகளை உதாசீனம் செய்யக்கூடாது. மலம் கழிப்பு பழக்கவழக்கங்களில் நிலையான மாற்றங்கள் (தொடர்ந்து நடிக்கும் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்றவை), குதப் பகுதியில் இரத்தக்கசிவு அல்லது மலத்தில் இரத்தம், காரணம் விளக்கப்பட இயலாதவாறு உடல் எடை குறைதல் மற்றும் தொடர்ந்து அடிவயிற்றில் அசௌகரியம் அல்லது தசைப் பிடிப்புகள் ஆகியவை இந்த அறிகுறிகளுள் உள்ளடங்கும். குறைவான நார்ச்சத்துள்ள உணவு, உடல் உழைப்பற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, உடற்பருமன், மரபியல் ரீதியில் பாதிப்பிற்கு ஆளாகும் நிலை மற்றும் குடும்பத்தில் பிறருக்கு மலக்குடல் புற்றுநோய் இருந்த வரலாறு ஆகியவை முக்கியமான இடர் காரணிகளாக இருக்கின்றன. இந்த அறிகுறிகளையும், இடர்க்காரணிகளையும் அறிந்திருப்பது, பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கும் மற்றும் வராமல் தடுப்பதற்கும் மிகவும் இன்றியமையாதவை.
அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் - ன் கோல்ஃபிட் செயல்திட்டம், மலக்குடல் புற்றுநோயைக் கண்டறிவதில் ஒரு புரட்சிகர அணுகுமுறையை அறிமுகம் செய்கிறது; மலக்குடல் புற்றுநோய்க்கு ஆரம்பநிலை சுட்டிக்காட்டல் அம்சமாக இருப்பது மலத்தில் மறைந்திருக்கும் இரத்தம். இதை அடையாளம் காண்பதற்கு ஊடுருவல் அல்லாத, அதிக துல்லியமான ஸ்க்ரீனிங் கருவியான (FIT) என்பதனை கோல்ஃபிட் செயல்திட்டம் ஒரு அங்கமாக கொண்டிருக்கிறது. FIT - க்கு ஒரேயொரு மாதிரி மட்டும் போதுமானது. அதிக அளவிலான கண்டறியும் திறனை வழங்கும் இச்சோதனை, உணவுமுறை கட்டுப்பாடுகளுக்கான தேவையை நீக்கி விடுகிறது; இதனால், நோயாளிகளுக்கு தோழமையான, சௌகரியமான விருப்பத்தேர்வாக இது இருக்கிறது.

கோல்ஃபிட் ஸ்க்ரீனிங் செயல்முறை கீழ்வரும் கட்டமைப்பு படிமுறையைப் பின்பற்றுகிறது;
1. பதிவு மற்றும் இடர்வாய்ப்பு நிலையில் வரிசைப்படுத்தல்: நோயாளிகள், அவர்களது இடர்வாய்ப்பு அளவுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றனர்.
சராசரி இடர்வாய்ப்பு நபர்கள் (குடும்பத்தில் பாதிப்பு வரலாறு இல்லாத 45+ வயதுள்ள நபர்கள்) FIT மற்றும் மலப்பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதிக இடர்வாய்ப்புள்ள நோயாளிகள் (குடும்பத்தில் பாதிப்பு இருந்த வரலாறு, மரபியல் ரீதியிலான நோய்க்குறிகள் அல்லது அழற்சியுள்ள மலக்குடல் நோய்) - க்கு FIT மற்றும் கொலனோஸ்கோப்பி சோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
2. பகுப்பாய்வு மற்றும் நோயறிதல் முடிவு: இயல்புக்கு மாறான சோதனை முடிவுகள், மல மாதிரிகளில் மறைந்திருக்கும் இரத்தம் அல்லது டிஎன்ஏ பிறழ்வுகளுக்காக மேலதிக பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன; பவளமொட்டுகள் (பாலிப்ஸ்) அல்லது புற்றுக்கட்டிகளுக்காக கொலனோஸ்கோப்பியின் முடிவுகள் செய்யப்படுகின்றன.
மீளாய்வு
3.பின்தொடர் சிகிச்சை நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனை: நெகட்டிவ் (எதிர்மறை) சோதனை முடிவுகள் உள்ள நபர்களுக்கு குறித்த காலஅளவுகளில் பின்தொடர் சோதனை / சிகிச்சை (1-10 ஆண்டுகள்) அறிவுறுத்தப்படுகிறது. பாசிட்டிவ் சோதனை முடிவுகள் உள்ள நபர்களுக்கு அவசியமானால், பயாப்சி எனப்படும் திசு ஆய்வு உட்பட, மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஸ்க்ரீனிங் செயல்முறைக்குப் பிறகு வாழ்க்கை முறை திருத்தங்கள், தனிப்பயனாக்கப்பட்ட ஸ்க்ரீனிங் திட்டங்கள் மற்றும் அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்கு மரபணு ரீதியிலான ஆலோசனை ஆகியவை நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
அப்போலோவின் கோல்ஃபிட் திட்டத்தை உள்ளடக்கிய இந்த விரிவான அணுகுமுறை, மலக்குடல் புற்றுநோய் வராமல் திறம்பட தடுக்கிறது; ஆரம்ப நிலையிலேயே பாதிப்பு கண்டறியப்படுவதையும், உடனடியான சிகிச்சை நடவடிக்கைகளையும் உறுதி செய்வதால், மலக்குடல் புற்றுநோய் மேலும் வளர்ச்சியடையும் இடர்வாய்ப்பை கணிசமான அளவு குறைக்கிறது.
அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மலக்குடல் மற்றும் ரோபோட்டிக் அறுவைசிகிச்சை மருத்துவரான டாக்டர். வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் இது தொடர்பாக கூறியதாவது: மலக்குடல் புற்றுநோய்க்கு பாதிப்பு கண்டறியப்பட்ட பிறகு சிகிச்சை என்பதிலிருந்து சுய விருப்பத்துடன் முன்னதாகவே ஸ்க்ரீனிங் செய்யும் செயல்முறைக்கு நாம் மாறியாக வேண்டும். மோசமான உணவுமுறை, உடலுழைப்பற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் உடற்பருமன் போன்ற வாழ்க்கை முறை காரணிகள், அதிகரித்து வரும் மலக்குடல் புற்றுநோய் நேர்வுகளுக்கு முக்கியப் பங்களிப்பாளர்களாக இருக்கின்றன. இந்நோய் வராமல் தடுப்பதற்கு அதிக நார்ச்சத்துள்ள உணவு, தவறாமல் உடற்பயிற்சி, தன்முனைப்புடன் ஸ்க்ரீனிங்
சோதனைகளை செய்து கொள்வது ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கக்கூடும். கோல்ஃபிட் திட்டத்தைக் கொண்டு சிக்கல்களை கணிசமாக குறைத்து, சிகிச்சை விளைவுகளை அதிகரிக்கக்கூடிய ஒரு எளிமையான ஊடுருவல் இல்லாத பரிசோதனையான FIT வழியாக ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பு கண்டறியப்படுவதை நாங்கள் ஏதுவாக்குகிறோம்"
அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மலக்குடல் மற்றும் ரோபோட்டிக் அறுவைசிகிச்சை மருத்துவரான டாக்டர். செந்தில் குமார் கணபதி பேசுகையில், "இந்தியாவில் மலக்குடல் புற்றுநோய் இளவயது நபர்கள் மற்றும் முதியவர்கள் என இரு தரப்பினரையும் அதிக அளவில் பாதித்து வருகிறது. எனினும், பாதிப்பிற்கு பின் உயிர்பிழைப்பு விகிதங்கள் பயமுறுத்தும் விதத்தில் மிகக் குறைவாகவே இருக்கின்றன.

காலம் தாழ்த்தி நோய் முற்றிய நிலையில் கண்டறியப்படுவதே இதற்குக் காரணம். சிறப்பான ஸ்க்ரீனிங் செயல்திட்டங்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் மேம்பட்ட சிகிச்சை விளைவுகள் உறுதி செய்யப்படுகின்றன. இந்தியாவிலோ 50% மலக்குடல் புற்றுநோய் நிகழ்வுகள் முற்றிய நிலைகளில் கண்டறியப்படுகின்றன மற்றும் கூடுதலாக, 20% நோயாளிகள், புற்றுநோய் உடலின் பிற பகுதிகளுக்கு பரவிய நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த அச்சுறுத்தும் போக்கை மாற்றுவதற்கு ஆரம்ப நிலையிலேயே ஸ்க்ரீனிங் செய்வதும் இந்நோய் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதும் மிக முக்கியமானது. அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் - ல் நோயாளிகளின் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்தவும் மற்றும் இந்தியாவில் மலக்குடல் புற்றுநோயின் சுமையைக் குறைக்கவும் கோல்ஃபிட் வழியாக தொடக்க நிலையிலேயே நோய் கண்டறிதல் மற்றும் துல்லியமான சிகிச்சைகளை வழங்கல் மீது நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்." என்று கூறினார்.
அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் தலைமை செயலாக்க அதிகாரி திரு. கரண் பூரி, அப்போலோவின் செயல்திட்டம் குறித்துப் பேசுகையில், "புற்றுநோய்க்கான மேம்பட்ட சிகிச்சையில் முன்னணி வகிக்கும் எமது இலக்கு என்பது, சிகிச்சையளிப்பது மட்டுமல்ல; வராமல் தடுக்கக்கூடிய மலக்குடல் புற்றுநோயின் தன்மை குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வை அதிகரிப்பதாகவும் இருக்கிறது.

நவீன சிகிச்சை மற்றும் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்த அணுகுமுறை வழியாக உயிர்பிழைப்பு விகிதங்களையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகின்ற துல்லிய சிகிச்சை பராமரிப்பை நாங்கள் வழங்குகிறோம். நோயாளிகளின் தனித்துவமான, தேவைகளுக்குப் பொருந்துகிறவாறு தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டங்களை உருவாக்க நோயாளிகளுடன் எமது குழுவினர் நெருக்கமாக செயல்படுகிறோம்.
கோல்ஃபிட் வழியாக, தொடக்க நிலையிலேயே கண்டறிவதையும், சிறப்பான சிகிச்சை விளைவுகள் கிடைப்பதையும் உறுதி செய்வதன் வழியாக தங்களது ஆரோக்கியத்தின் மீதான கட்டுப்பாட்டை தனிநபர்கள் பெறுமாறு செய்வதே எமது நோக்கமாகும். ஸ்க்ரீனிங் முதல், சிகிச்சை வரையிலான பாதையை எளிமையாக்குவதன் வழியாக, இந்தியாவில் மலக்குடல் புற்றுநோயை குறைக்கும் நோக்கத்தோடு நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்." என்று கூறினார்.
மலக்குடல் புற்றுநோய் என்பது, தொடக்க நிலையிலேயே கண்டறியப்படும்போது, சிகிச்சையளித்து குணப்படுத்தக்கூடிய புற்று நோயாகவும் மற்றும் வராமல் தடுக்க அதிக சாத்தியம் கொண்ட நோயாகவும் இருக்கிறது. தனிநபர்களை, குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் குடும்பத்தில் இருந்த வரலாறை அல்லது அறிகுறிகள் விடாப்பிடியாக தொடர்ந்து இருக்கின்ற நபர்கள் குறித்த காலஅளவுகளில் ஸ்க்ரீனிங் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அப்போலோ கேன்சர் சென்டர் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது, உரிய நேரங்களில் FIT சோதனைகள், கொலனோஸ்கோப்பி போன்ற தன்முனைப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பதும் அதிகரித்து வரும் மலக்குடல் புற்றுநோயின் போக்கை தடுத்து நிறுத்தவும் மற்றும் எண்ணற்ற உயிர்களை காப்பாற்றவும் நிச்சயம் உதவும்.

அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து
புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும்.
உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 390-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.
இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சை பெறுவதற்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிறது.