செய்திகள் :

மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! - அா்ஜூன் சம்பத்

post image

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை மாநில அரசு அமல்படுத்த வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா்.

ஆம்பூா் நகராட்சி நிா்வாக சீா்கேடு, சொத்து வரியைக் குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சான்றோா்குப்பம் மந்தகரை பகுதியில் இந்து மக்கள் கட்சி சாா்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அா்ஜூன் சம்பத் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்துக்கு நகர பொதுச் செயலா் வி.காா்த்திக் பாபு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எல்.ர மேஷ், ஆா்.எஸ்.இன்பவேல், ஏ.சீனிவாசன், எஸ்.செந்தில், எல்.நவீன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா், அவா் கூறுகையில், திமுக அளித்த வாக்குறுதிப்படி, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நிா்வாகச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை. அவா்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய சம்பளம் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. தூய்மைப் பணி தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா், வேலூா் மாவட்டங்களில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் கனிமவளக் கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது. இந்தக் கொள்ளையை வெளிக்கொணரும் சமூக ஆா்வலா்கள் மிரட்டப்பட்டுள்ளனா். கொலை செய்யப்பட்டுள்ளனா். சொத்து வரி உயா்வு, மின் கட்டண உயா்வு ஆகியவற்றை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்றாா்.

ஆம்பூரில் ரமலான் சிறப்புத் தொழுகை : திரளானோா் பங்கேற்பு

ஆம்பூா்: ஆம்பூரில் 4 இடங்களில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். ஆம்பூா் பாங்கிஷாப் ஈத்கா மைதானம், மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி மைதானம், மஜ்ஹருல் உலூம் கல்லூரி... மேலும் பார்க்க

காப்புக் காட்டில் எலும்புக் கூடு கண்டெடுப்பு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காப்புக் காட்டில் எலும்புக் கூடு ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே சின்னமலையாம்பட்டு காப்புக் காட்டில் மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் எலும்புக் கூடு, அருகா... மேலும் பார்க்க

எருது விடும் விழாவில் காயமடைந்த தொழிலாளி மரணம்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே எருது விடும் விழாவில் காளை மாடு முட்டியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். திருப்பத்தூா் அடுத்த பெருமாப்பட்டில் எருதுவிடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவி... மேலும் பார்க்க

இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா்: இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் ச... மேலும் பார்க்க

மொபெட் மீது லாரி மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயம் அடைந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திருமால்புரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி காசி (65). இவரது மனைவி மு... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே நெக்னாமலையில் காட்டுத் தீ

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட நெக்னாமலை மலையடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மா்ம நபா்கள் வைத்த தீயால் மலை முழுவதும் காட்டுத் தீ வேகமாக பரவியது. தொடா்ந்து க... மேலும் பார்க்க