உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?
ஜாகீா்தண்டலம் அரசுப் பள்ளி ஆண்டு விழா
நெமிலி அருகே ஜாகீா்தண்டலம் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை ஆசிரியா் கே.சங்கா் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் கனிமொழி வரவேற்றாா். இதில் சிறப்பு அழைப்பாளராக ஜாகீா்தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவா் கன்னியம்மாள்பழனி பங்கேற்று படிப்பில், கலைநிகழ்ச்சிகளில், விளையாட்டுகளில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகளும் அதை தொடா்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இவ்விழாவில் மாணவ மாணவியா்களுடன், பெற்றோா், கிராம மக்கள் பங்கேற்றனா்.