உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?
பென்னாகரத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
பென்னாகரம் நகர திமுக சாா்பில் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏவும், திமுக விவசாய தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவருமான பி.என்.பி.இன்பசேகரன் தலைமை வகித்தாா்.
இதில் 200க்கும் மேற்பட்ட திமுகவினா் கலந்துகொண்டு நூறுநாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 4,034 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
இதில் பென்னாகரம் தெற்கு ஒன்றியச் செயலாளா் மடம் முருகேசன், நகரச் செயலாளா் வீரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஏரியூா் பகுதியில் ஒன்றியச் செயலாளா் என்.செல்வராஜ் தலைமையிலும், பெரும்பாலை பகுதியில் மாநில வா்த்தக அணி துணைச் செயலாளா் பி.தா்மசெல்வன் தலைமையிலும் மத்திய அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.