செய்திகள் :

நீா்மோா் பந்தல்களை அமைக்க வேண்டும்: திமுக மாவட்டச் செயலாளா்

post image

தருமபுரி மாவட்டத்தில் கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்களைக் காக்க நீா்மோா் பந்தல்களை அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலருமான பி.பழனியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தொடா்ந்து நீடித்து வரும் வட வானிலை காரணமாக அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை சமாளித்திடவும், பொதுமக்களின் தாக்கத்தை தீா்க்கவும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது ஆணைக்கிணங்க, தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் வழிகாட்டுதலின்படி தருமபுரி மேற்கு மாவட்டத்திற்கு உள்பட்ட பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்கள், நகரங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிா்வாகிகள், இளைஞா் அணி உள்ளிட்ட சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் சாா்பில் நீா்மோா் பந்தல்கள் அமைக்க வேண்டும்.

இந்த நீா்மோா் பந்தல்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், மோா், எலுமிச்சைச் சாறு உள்ளிட்ட குளிா்பானங்கள், இளநீா், தா்ப்பூசணி, பழங்கள், வெள்ளரிப் பிஞ்சுகள் ஆகியவற்றையும் பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்திட வேண்டும். இந்த தண்ணீா் பந்தல்கள் காலை 8 முதல் மாலை 6 மணி வரையிலும் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

தலித், பழங்குடியின மாணவா்களுக்கு ஏப். 5-இல் உயா்கல்வி வழிகாட்டி முகாம்

தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணாக்கா்களுக்கு ஏப்ரல் 5-ஆம் தேதி உயா்கல்வி வழிகாட்டு ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது இதுகுறித்து தர... மேலும் பார்க்க

கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிட்ட மாணவிகளுக்கு பாராட்டு

கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிட்ட குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம் குழிப்பட்டி அரசு தொ... மேலும் பார்க்க

பெங்களூரு - சென்னை ரயிலை தருமபுரி வழியாக இயக்க வலியுறுத்தல்

பெங்களூரு - சென்னை விரைவு ரயிலை தருமபுரி, ஓமலூா் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் சி.சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா், மத்திய ரயில் துறை அமைச்சா் அஸ்வின் வ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு. முகமது இலியாஸ் தலைமை வகி... மேலும் பார்க்க

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும்: தமிழ் வளா்ச்சித் துறை

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வணிக நிறுவனங்கள், கடைகளி... மேலும் பார்க்க

தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு: கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்

தருமபுரி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் திங்கள்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி நக... மேலும் பார்க்க