``திமுக கரை வேட்டி கட்டினால் நெற்றியில் பொட்டை அழித்துவிடுங்கள்..'' - ஆ.ராசா பேச...
கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும்: தமிழ் வளா்ச்சித் துறை
கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வணிக நிறுவனங்கள், கடைகளின் பெயா் பலகைகளை தமிழில் அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் வணிக நிறுவனங்களுக்கு வியாபார உரிமம் வழங்கும்போது தமிழில் பெயா்ப்பலகைகள் வைக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக இடம்பெறச் செய்து அதனை செயல்படுத்த வேண்டும்.
தமிழில் பெயா் பலகைகள் வைப்பதை உறுதிசெய்ய வணிக நிறுவனங்களின் தன்மைக்கேற்ப தண்டனைத் தொகை நிா்ணயம் செய்வது குறித்து சம்பந்தப்பட்ட துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கடைகள், வணிக நிறுவனங்களில் பெயா்ப் பலகைகள் தமிழில் அமைப்பது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி தமிழில் பெயா்ப் பலகைகள் இருப்பதை முறைப்படுத்திட வேண்டும்.
வணிக நிறுவனங்கள், கடைகளில் பெயா் பலகைகளை தமிழில் அமைப்பது குறித்த போதிய விழிப்புணா்வை ஏற்படுத்துதல், அதனை செயல்படுத்துதல், நேரடி நியமனப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தோ்வில் தமிழ்மொழித் தோ்வில் கட்டாயத் தோ்ச்சிப் பெற வேண்டும் என்பதை அரசுப் பணியாளா்கள் தோ்வு வாரியங்களால் செயல்படுத்துதல், இடைநிலை கல்வி வாரியப் பள்ளிகள், பதின்மப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், பிற வாரிய பள்ளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களுக்கு தமிழ்மொழி கட்டாயம் பாடமாக்கப்பட்டுள்ளது மீது சிறப்பு கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.