40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிட்ட மாணவிகளுக்கு பாராட்டு
கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிட்ட குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம் குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவில், இப்பள்ளியின் 5-ஆம் வகுப்பு மாணவிகளான சுருத்திகா, பவுனம்மாள், மகாலட்சுமி ஆகியோரின் கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிடப்பட்டன. மாணவ, மாணவிகள் சிறு வயதில் படைப்பாற்றலுடன் வளா்வது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டு விழாவில் பங்கேற்றவா்கள் பாராட்டு தெரிவித்திருந்தனா்.
இதனைத் தொடா்ந்து, கையெழுத்து பிரதி நூல்களை வெளியிட்ட மாணவிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ரெ.சதீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் தென்றல், பென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலா் துளசிராமன், வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் முனுசாமி, குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் கோவிந்தசாமி ஆகியோா் உடனிருந்தனா்.