40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
பெங்களூரு - சென்னை ரயிலை தருமபுரி வழியாக இயக்க வலியுறுத்தல்
பெங்களூரு - சென்னை விரைவு ரயிலை தருமபுரி, ஓமலூா் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் சி.சரவணன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா், மத்திய ரயில் துறை அமைச்சா் அஸ்வின் வைஷ்னவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
தருமபுரி மாவட்ட மக்கள் நேரடியாக சென்னைக்கு ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு தருமபுரி - மொரப்பூா் ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அத்திட்டம் நிறைவேறும் வரை பெங்களூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விரைவு ரயிலை தருமபுரி, ஓமலூா் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை- நிஜாமுதீன் வாராந்திர விரைவு ரயில், பெங்களூரு -கன்னியாகுமரி விரைவு ரயில் ஆகியவற்றை ஏற்கெனவே நடைமுறையில் இருந்ததுபோல தருமபுரி வழியாக இயக்க வேண்டும். அதேபோல ஹுப்ளி - ராமேசுவரம் வாராந்திர விரைவு ரயிலை கூடுதல் நாள்களில் இயக்க வேண்டும். மைசூரு- ராமேசுவரம் வழித்தடத்தில் புதிதாக ரயில் சேவை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.