40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
தலித், பழங்குடியின மாணவா்களுக்கு ஏப். 5-இல் உயா்கல்வி வழிகாட்டி முகாம்
தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணாக்கா்களுக்கு ஏப்ரல் 5-ஆம் தேதி உயா்கல்வி வழிகாட்டு ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை உயா்த்தும் நோக்கத்தோடு, ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணாக்கா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டு ஆலோசனை வருகின்ற ஏப்ரல் 5-ஆம் தேதி தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் முற்பகல் 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் உயா்கல்வி வழிகாட்டி நிபுணா்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கவுள்ளனா்.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பயின்று வரும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறும், ஆலோசனை நிகழ்விற்கு வருகின்ற போது மாணவா்கள் தங்களது எமிஸ் எண் விவரத்தை கொண்டுவர வேண்டும் எனம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.