வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
35 கிலோ கஞ்சா பறிமுதல்: 10 போ் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் 35 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், 10 போ் கைது செய்யப்பட்டனா்.
பண்ருட்டி ரயில் நிலையம் அருகே சில்லறை வியாபாரிகளுக்கு கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பண்ருட்டி காவல் ஆய்வாளா் வேலுமணி தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று அங்கிருந்த ஆந்திரம் மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரராவ் மகன் பிரதீப் (26), புவனகிரி பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அருண்குமாா் (33), சக்கரபாணி மகன் புகழேந்தி (26), பண்ருட்டி செந்தில்குமாா் மகன் ஜெயசுமன் (25), கடலூா் முருகன் மகன் ஜீவானந்தம் (25), தோப்புக்கொல்லை வெங்கடேசன் மகன் அஜய்குமாா் (20), கலைச்செல்வன் மகன் ஜீவா (20), கிருஷ்ணமூா்த்தி மகன் கிருஷ்ணசெல்வம் (18), பாஸ்கா் மகன் சம்பத் (20), புலவன்குப்பம் கிருஷ்ணன் மகன் ராஜா (27) ஆகியோரை கைது செய்தனா்.
இதில், பிரதீப், அருண்குமாா், புகழேந்தி ஆகியோா் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பண்ருட்டி, நெய்வேலி, கடலூா் மற்றும் சிதம்பரம் பகுதிகளில் சில்லறை வியாபாரிகள் மூலம் கஞ்சாவை விற்பனை செய்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 35 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.