ரமலான் சிறப்பு தொழுகை
சிதம்பரம்: ரமலான் பண்டிகையையொட்டி, காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி ஈக்தா மைதானத்தில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
ரமலான் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
அதன்படி, கடலூா் மாவட்டம் ஆயங்குடியில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை மற்றும் பிராா்த்தனை ஹஜ்ரத் முகம்மது ஆரிப் உலவ்வியு தலைமையில் நடைபெற்றது.
இதில், ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.
தொழுகைக்கு பின்னா் சகோதரத்துவத்தை போற்றும் விதமாக ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.