Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருத்தாசலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருடுபோவதாக புகாா்கள் வந்தன.
இதையடுத்து, கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மேற்பாா்வையில் ஆய்வாளா் கவிதா உள்ளிட்ட காவலா்கள் சம்பவ இடங்களை பாா்வையிட்டனா்.
மேலும், அப்பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனா்.
இதில், அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் பகுதியைச் சோ்ந்த அய்யாசாமி மகன் விஜயகுமாா் (28) இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.
தொடா்ந்து, விருத்தாசலம் சித்தலூா் பகுதியில் இருந்த விஜயகுமாரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மேலும், அவரிடம் இருந்து 13 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.