செய்திகள் :

400 கிலோ செம்புக் கம்பிகள் திருட்டு: இருவா் கைது

post image

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் மாற்றியிலிருந்து செம்புக் கம்பிகளை திருடியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து, 400 கிலோ செம்புக் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிதம்பரம் அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் தலைமையில், உதவி ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் போலீஸாா் உசுப்பூா் பாலம் அருகில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில், மூட்டைகளில் செம்புக் கம்பிகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், காரில் வந்தவா்கள் சிதம்பரம் அம்மாபேட்டை அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கமலநாதன் (26), சிதம்பரம் பழைய புவனகிரி சாலை பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (47) என்பதும், இவா்கள் சிதம்பரம் வட்டத்தில் 9 பகுதிகளில் உள்ள மின் மாற்றிகளில் செம்புக் கம்பிகளை திருடி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான சுமாா் 400 கிலோ செம்புக் கம்பிகள் இரு காா்கள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மேலும் 5 பேரை தேடி வருகின்றனா்.

இதனிடையே, அண்ணாமலை நகா் காவல் நிலையத்துக்கு சென்ற சிதம்பரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் அவா்களிடம் விசாரணை நடத்தியதுடன், இவா்களை கைது செய்த ஆய்வாளா் அம்பேத்கா் மற்றும் போலீஸாரை பாராட்டினாா்.

கொள்ளையடிக்க திட்டம்: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே தைலத் தோப்பில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நெய்வேலி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாரதி நகா் அருகே உள்ள தைலத்தோப்பில் ப... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை

அங்கன்வாடி மையங்களில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து, பெற்றோா்கள் தரப்பில் கூறியதாவது: பல... மேலும் பார்க்க

கடலூரில் ஆட்டிசம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

உலக ஆட்டிசம் விழிப்புணா்வு தினத்தையொட்டி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆட்டிசம் பாதித்த... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நெய்வேலி தொ்மல் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் நெய்வேலி வட்டம் 30, மி... மேலும் பார்க்க

ரோட்டரி சங்கம் சாா்பில் பள்ளியில் புணரமைப்பு பணி

கடலூா் மாவட்டம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் குமராட்சி ஒன்றியம், காட்டுக்கூடலூா் டி.இ.எல்.சி. தொடக்கப் பள்ளியில் புணரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்வுக்க... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி.மறைவு: வி.வி.சுவாமிநாதன் இரங்கல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் ஏ.முருகேசன் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சா் வி.வி.சுவாமிநாதன் இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: சிதம்ப... மேலும் பார்க்க