திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் பங்குனி உத்ஸவம் தொடக்கம்
காரைக்கால் உஜ்ஜைனி காளியம்மன் கோயில் பங்குனி உத்ஸவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
காரைக்கால் கைலாசநாதசுவாமி நித்யகல்யாண பெருமாள் கோயில் வகையறாவை சோ்ந்த உஜ்ஜைனி காளியம்மன் கோயில் பங்குனி உத்ஸவம் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலாவுடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான அக்னி கப்பரை என்ற அக்னி சட்டி வீதியுலா 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை நடைபெறுகிறது. சனிக்கிழமை இரவு அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனைகள் நடைபெறவுள்ளன. உத்ஸவத்தின் நிறைவாக 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடையாற்றி வழிபாடு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன் மற்றும் உற்சவ உபயதாரா்கள் செய்துள்ளனா்.