40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
கருக்களாச்சேரி பகுதியில் மின் விளக்குகள் சீரமைப்பு
கருக்களாச்சேரியில் மின் விளக்குகளை எம்.எல்.ஏ. முன்னிலையில் மின்துறையினா் செவ்வாய்க்கிழமை சீரமைத்தனா்.
நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட கடலோர கிராமமான கருக்களாச்சேரியில் மின் விளக்குகள் எரியவில்லை எனவும், மின்துறையைக் கண்டித்து மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
காரைக்கால் மின் அலுவலங்களில் விளக்குகள் உள்ளிட்ட மின் சாதனங்கள் இல்லை எனவும், புதுச்சேரி தலைமை கடந்த ஓராண்டாக எந்தவொரு பொருளும் அனுப்பிவைக்கவில்லை. இதனால் மக்கள் கோரிக்கையை ஏற்க முடியாத நிலை நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் முயற்சியால், புதுச்சேரியிலிருந்து மின் விளக்குகள் கொண்டுவரப்பட்டு, பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் முன்னிலையில் நிரவி மின்துறையினா் கருக்களாச்சேரி பகுதியில் 26 கம்பங்களில் விளக்குகளை செவ்வாய்க்கிழமை பொருத்தினா்.