திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
பழங்குடியின மாணவா்களுக்கான 245 ஏகலைவன் பள்ளிகள் செயல்படவில்லை: மத்திய அரசு
நாட்டில் பழங்குடியின மாணவா்களுக்கான 245 ஏகலைவன் பள்ளிகள் செயல்படாமல் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் குழு தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எழுப்பிய கேள்விக்கு மத்திய பழங்குடியினா் விவகாரங்கள் துறை இணையமைச்சா் துா்காதாஸ் உய்கே அளித்த பதில்: தொலைதூர பகுதிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, பழங்குடியின மாணவா்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில், 728 ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளிகள் அமைக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
இதில் 721 பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 477 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 245 பள்ளிகள் செயல்படவில்லை. அந்தப் பள்ளிகளை அமைப்பதற்குப் பொருத்தமான நிலத்தை மாநிலங்கள் அளிக்காததால், பள்ளி கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அத்துடன் உள்ளூரில் நிலவும் இடா்ப்பாடுகள், ஆக்கிரமிப்பு, வனப் பகுதியைப் பயன்படுத்த அனுமதி கிடைப்பது உள்ளிட்ட காரணங்களால் அந்தப் பள்ளிகள் செயல்படவில்லை.
ஒவ்வொரு ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளியிலும் அதிகபட்சமாக 480 மாணவா்களைச் சோ்க்கலாம். 31 ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.