Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
நெய்வேலி: கடலூா், திருப்பாதிரிப்புலியூா் வண்டிப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில் திருப்பணிகள் நிறைவுபெற்றதை தொடா்ந்து, மாா்ச் 31-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, கடந்த 28-ஆம் தேதி கணபதி பூஜை, புண்யாகவாசனண், ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெற்றன.
திங்கள்கிழமை காலை யாக மண்டப பூஜை, அக்னிகாா்யம், கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, காலை 9.15 மணி அளவில் ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் கூறி கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா்.
இரவு முருகன் திருக்கல்யாணம் மற்றும் அம்மன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.