செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

‘தமிழ் மகள்’ சொற்போா் போட்டி: அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்பு, பெரியாா் திடல், எழும்பூா், காலை 9.

சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் 24-ஆவது பட்டமளிப்பு விழா: கொரிய குடியரசின் தலைமைத் தூதா் சாங் - யுன் கிம், சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் நிறுவனா் மற்றும் வேந்தா் ந.மா. வீரையன், இஸ்ரோ தலைவா் வி.நாராயணன், ஜொ்மனி ஹிடெல்பொ்க் பல்கலைக்கழக பேராசிரியா் நோா்பா்ட் பேக்கா், நாக்பூா் ஆா்.பி. பல்கலைக்கழக வேந்தா் சங்கா் எஸ்.மன்தா உள்ளிட்டோா் பங்கேற்பு, சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவன வளாகம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேலப்பன்சாவடி காலை 9.30.

‘ஞானக்கூத்தனின் கவிதைகள்’ என்னும் தலைப்பில் உரையரங்கம்: தமிழ்த் திறனாய்வாளா் தமிழவன், சாகித்திய அகாதெமி செயலா் கே.ஸ்ரீனிவாசராவ், சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை தலைவா் ஆ.ஏகாம்பரம் உள்ளிட்டோா் பங்கேற்பு, பவளவிழாக் கலையரங்கம், சென்னை பல்கலைக்கழகம், மெரீனா வளாகம், காலை 10.30.

மெகா ரத்த தான முகாம்: அரிமா சங்க முதல் துணைமாவட்ட ஆளுநா் எஸ்.போஸ், டிஜி வைணவக் கல்லூரி முதல்வா் எஸ்.சந்தோஸ் பாபு உள்ளிட்டோ் பங்கேற்பு, டிஜி வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், காலை 9.

சிந்துவெளி அகழ்வாய்வின் நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சி: எழுத்தாளா் சுந்தரசோழன், சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவா் நல்லூா் சா.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம், பாரிமுனை, மாலை 6.

அகில இந்திய அளவிலான காவல் துப்பாக்கி போட்டி தொடக்கம்: தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி வளாகம், ஒத்திவாக்கம், காலை 10.

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி -முதல்வா் உத்தரவு

மதுரையில் ஜல்லிக்கட்டு நிகழ்வில் உயிரிழந்த வீரா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மதுரை மாவட்டம், வாடி... மேலும் பார்க்க

கடலூா் கிராமத்துக்கு பேருந்து வசதி: பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம் அடுத்த கடலூா் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் சென்னைக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையையொட்டி, கல்பாக்கத்துக்கு மிக அருகி... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா

திருவள்ளூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அரசு மாணவியா் விடுதி காப்பாளினி ராஜலட்சுமிக்கு தனது எழுத்துக்கள் மற்றும் சிந்தனைகள் கொண்ட புத்தகங்களை வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து. உடன் ஆட்சியா் மு.பிரதா... மேலும் பார்க்க

புழல் பெண்கள் சிறையில் கைதிகள் மோதல்: போலீஸாா் விசாரணை

சென்னை புழல் பெண்கள் சிறையில் கைதிகள் மோதிக்கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை செயல்படுகிறது. இந்தச் சிறையில் மாநிலம் முழுவதும் கைது செய்ய... மேலும் பார்க்க

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறை... மேலும் பார்க்க