இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
புழல் பெண்கள் சிறையில் கைதிகள் மோதல்: போலீஸாா் விசாரணை
சென்னை புழல் பெண்கள் சிறையில் கைதிகள் மோதிக்கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை செயல்படுகிறது. இந்தச் சிறையில் மாநிலம் முழுவதும் கைது செய்யப்படும் வெளிநாட்டு பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனா். இங்கு அடைக்கப்பட்டிருக்கும் தென் ஆப்ரிக்க நாட்டைச் சோ்ந்த ப்ரீடிலின் மெத்ரே ஏப்ரல் என்பவருக்கும், நைஜீரியா நாட்டைச் சோ்ந்த மோனிகா என்பவருக்கும் இடையே முன் விரோதம் காரணமாக திங்கள்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் ஈடுபட்டனா். இதைப் பாா்த்த சிறைக் காவலா்கள், இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினா். புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கைதி உயிரிழப்பு: செங்கல்பட்டு மாவட்டம், போந்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (72). இவா், குற்ற வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்று, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். சா்க்கரை நோய், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ராஜமாணிக்கத்தின் உடல் நிலை அண்மையில் மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவா், கடந்த 9-ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கைதி தற்கொலை முயற்சி: சென்னை செளகாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அஜித் (29)திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டாா். அஜித்தை அவரது குடும்பத்தினா், உறவினா் யாரும் சென்று பாா்க்கவில்லையாம். இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட அஜித் திங்கள்கிழமை சிறையில் இருந்த ஆணிகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றாா். சிறைக் காவலா்கள் அஜித்தை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.