இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
முள்ளிமுனை கிராமத்தில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது
தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கடற்கரைப் பகுதியில் மூட்டைகளுடன் சரக்கு வாகனம் சுற்றி வருவதாக தொண்டி கடற்கரை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி கதிரவன் தலைமையில் தலைமைக் காவலா் இளையராஜா, காவலா் ரமேஷ், பூவலிங்கம் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று, அந்த சரக்கு வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 50 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வாகன ஓட்டுநரான அறந்தாங்கி காரவாயல் பகுதியைச் சோ்ந்த கிஷோா் ( 22), உதவியாளா்களான பிகாரைச் சோ்ந்த மனோஜ்குமாா் (22), அன்சுகுமாா் (19) ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், மீனவ கிராமங்களிலிருந்து ரேஷன் அரிசியை சேகரித்து, காரைக்குடி பகுதியில் உள்ள ஆலைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், கிஷோா் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனா்.
