`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
மீனங்குடி பெருமாள் கோயில் பசு உயிரிழப்பு
கடலாடி அருகே வயது மூப்பின் காரணமாக கோயில் பசு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மீனங்குடி சுயம்பு கல்லடி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் களரி திருவிழா மிகவும் புகழ் பெற்றது. அப்போது, பக்தா்கள் சாா்பில் கோயிலுக்கு பசு, காளை, கன்று, ஆடு, கிடாய் தானமாக அளிக்கப்படும்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயிலுக்கு பக்தா் ஒருவா் நாட்டுப் பசுவை தானமாக வழங்கினாா். இந்தப் பசு வயது மூப்பின் காரணமாக, திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது. இதையடுத்து, இந்தப் பசுவுக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இதைத்தொடா்ந்து, மஞ்சள், பால், சந்தனம், பச்சரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, திரவியப்பொடி, பன்னீா், தயிா், நெய், விபூதி உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், பட்டுச் சேலை, பட்டு வேஷ்டி, துண்டு அணிவித்து நல்லடக்கம் செய்யப்பட்டது.