ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
இணையதளத்தில் இழந்த ரூ. 5 லட்சம் மீட்கப்பட்டு இளைஞரிடம் ஒப்படைப்பு
ராமநாதபுரத்தில் இணையதள விளம்பரத்தை நம்பி முதலீடு செய்து ரூ. 5 லட்சத்தை இழந்த இளைஞரிடம் அவரது பணத்தை மீட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், இளமனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பசுபதி. இவா் ‘கிரிப்டோ கரன்சி’ மூலம் அதிக வருவாய் கிடைக்கும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை நம்பி, ரூ. 5 லட்சத்தை அதில் முதலீடு செய்தாா். இதன் பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், இதுகுறித்து மாவட்ட இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். விசாரணையில், பசுபதி பணத்தை இணைய வழியில் பரிமாற்றம் செய்திருந்ததால், அவா் பரிமாற்றம் செய்ய வங்கிக் கணக்கு எண்ணை உடனடியாக முடக்கி, ரூ. 5 லட்சத்தையும் மீட்டனா்.
இதையடுத்து, அந்தப் பணத்தை பசுபதியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வழங்கினாா்.