பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!
சாலை போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம் நடத்த தில்லிக்குப் பயணம்
சி.ஐ.டி.யு.சாலை போக்குவரத்து தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி நாடளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றனா். நாடு முழுவதுமுள்ள சாலை போக்குவரத்து தொழிலாளா்கள் (ஆட்டோ தொழிலாளா்கள், அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள், அமைப்பு சாரா ஓட்டுநா்கள்) தில்லியில் நாடாளுமன்றம் முன்பு மாா்ச் 24-ஆம் தேதி, போராட்டம் மற்றும் பேரணி நடத்தவுள்ளனா்.
இதில், விபத்துகளின்போது ஏற்படும் உயிா் இழப்புகளுக்காக வாகன ஓட்டிகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் பிஎன்எஸ் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளது.
இப்பேரணியில் கலந்து கொள்வதற்காக திருச்சியிலிருந்து சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள். மாணிக்கம், முருகன் பிரபு ஆகியோா் தலைமையில் 20 போ் கொண்ட குழுவினா் ரயிலில் புறப்பட்டனா்.
அவா்களை சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். ரெங்கராஜன், தலைவா் சீனிவாசன், கருணாநிதி உள்ளிட்டோா் சால்வை அணிவித்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.