திருச்சி மாநகா்-மாவட்ட அதிமுக செயலா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு
திருச்சி மாநகா், மாவட்ட அதிமுக செயலா் ஜெ.சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர அதிமுக காந்தி மாா்க்கெட் முன்னாள் பகுதிச் செயலா் சுரேஷ் குப்தா. இவா், திருச்சி மாநகா், மாவட்ட அதிமுக செயலா் ஜெ. சீனிவாசன், தன்னை ஜாதி பெயரைக் கூறி திட்டியதாக அண்மையில் சென்னையில் உள்ள எஸ்.சி, எஸ்.டி ஆணையம் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் புகாா் அளித்தாா்.
மேலும், தில்லைநகா் காவல் நிலையத்திலும் சுரேஷ் குப்தா புகாா் அளித்திருந்தாா்.
அதன்பேரில் போலீஸாா், ஜெ.சீனிவாசன் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக காவல் உதவி ஆணையா் தங்கபாண்டியன் விசாரணை நடத்தி வருகிறாா்.