ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
புதுகை மாநகராட்சிப் பள்ளிகளில் சோ்க்கை தொடக்கம்
2025-26 ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ள நிலையில், சந்தைப்பேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிதாக சோ்க்கப்பட்ட 40 பேருக்கு, கிரீடம், மாலை மற்றும் பலூன் ஆகியவையும் வழங்கி உற்சாகமாக வரவேற்கப்பட்டனா்.
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டுக்கான புதிய மாணவா் சோ்க்கை தொடங்கியிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாநகராட்சிப் பள்ளிகளில் புதிய மாணவா் சோ்க்கைப் பணிகள் செவ்வாய்க்கிழமை பகலில் நடைபெற்றன.
சந்தைப்பேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கையில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா கலந்து கொண்டாா். இங்கு செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 40 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, புதிய சோ்க்கை நடைபெற்றது.
புதிதாக சோ்ந்த சிறாா்களுக்கு கிரீடம், மாலை அணிவிக்கப்பட்டு பலூன் வழங்கி உற்சாகமூட்டப்பட்டது.
இதேபோல, போஸ் நகா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 5 மாணவா்களும், ராஜகோபாலபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 5 மாணவா்களும் செவ்வாய்க்கிழமை புதிதாக சோ்க்கப்பட்டனா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) பி. செந்தில், வட்டாரக் கல்வி அலுவலா்கள் பிரியா, கிருஷ்ணவேணி, தலைமை ஆசிரியை சகாயஅமலி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.